பாதாம் Vs வேர்க்கடலை இதில் எது சிறந்தது தெரியுமா?

Published by
K Palaniammal

Badam Vs Peanut– பாதாம் மற்றும் வேர்க்கடலை இவற்றில் எது சிறந்தது என்றும் சாப்பிடும் முறைபற்றியும்   இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

நம் மக்களுக்கு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பளபளப்பாக இருக்கும் உணவுப் பொருள்களும் விலை அதிகமாக இருந்தால் தான் அதில் சத்துக்களும் அதிகம் இருக்கும் என நினைக்கிறார்கள் .உதாரணமாக ஆப்பிளை விட கொய்யாவில் அதிக சத்துக்கள் உள்ளது விலையும் குறைவு.

ஆனால் ஆப்பிள் விலை அதிகமாக இருப்பதால் அதில் சத்துக்களும் அதிகமாக இருக்கும் என்று நம் மக்கள் நினைக்கிறார்கள் .அதேபோல்தான் ராகி, கம்பு போன்றவற்றை விட ஓட்ஸ் தான் சிறந்த உணவு என்று நம்புகிறார்கள்.

அதேபோல் நட்ஸில்  பாதாம் பிஸ்தா போன்றவை தான் சிறந்தது என நினைக்கிறார்கள் அது எந்த அளவுக்கு உண்மை என்பதை இங்கே தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பாதாம் மற்றும் வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள்;

கொழுப்புச்சத்து மற்றும் கலோரிகள் இரண்டிலுமே சமமாக உள்ளது .ஆனால் புரதச்சத்து பாதாமை விட வேர்க்கடலையில்தான் அதிகம். நிலக்கடலையில் நியாசின், விட்டமின் பி6 ,செலினியம் ,காப்பர் ,சிங்க், பென்சோனிக்  ஆசிட் போன்ற விட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளது.

ஆனால் பாதாமில் விட்டமின் ஈ சத்து மற்றும் கால்சியம் ,அயன் மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. இரண்டையும் ஒப்பிடும்போது ஒரு சில விட்டமின்கள் வேர்க்கடலையில் அதிகமாகவும் தாதுக்கள் குறைவாகவும் உள்ளது. பாதாமில் தாதுக்கள் அதிகம் உள்ளது விட்டமின் குறைவாக உள்ளது.

எடுத்துகொள்ளும் முறை ;

பாதாமை ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்து வரை எடுத்துக் கொண்டாலே போதுமானது. ஆனால் நிலக்கடலை 30 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். பாதாமை சாதாரணமாக கழுவி விட்டு எடுத்துக் கொண்டாலே போதும். ஒரு சிலர் அதன் தோலை நீக்கி விடுகின்றனர் அந்த தோலில் தான் விட்டமின் ஈ சத்து உள்ளது.

வேர்க்கடலையை ஊறவைத்து எடுத்துக்கொண்டால் அதன் மருத்துவ பலன்கள் முழுமையாக கிடைக்கும். அதற்கு அடுத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். வறுத்த கடலை மற்றும் உப்பு சேர்த்து வறுக்கப்பட்ட கடலைகளை குறைவாக எடுத்துக் கொள்வதே சிறந்தது.

வேர்க்கடலை நன்மைகள் ;

வேர்க்கடலை உடலில் நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைக்கிறது ,ஆனாலும் அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும் .வேர்க்கடலை உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்.

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் 30 கிராம் அளவும் உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு வெல்லத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். மேலும் கிளைசிமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் ஆக உள்ளது.

மேலும் இதில் உள்ள டய்ட்ரி  பைபர் இன்சுலின் உற்பத்தியை கட்டுக்குள் வைக்கிறது . குழந்தைகள் கர்ப்பிணிகள் தாய்மார்கள் என அனைவருமே எடுத்துக் கொள்ளலாம். வேர்க்கடலையில் அர்ஜுனன் என்ற அமினோ ஆசிட் உள்ளது . இது ரத்த குழாய்களை விரிவடைய செய்யும்.

மேலும் ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் விந்தணுக்களை அடர்த்தியாக்கவும் உதவி செய்யும். உடற்பயிற்சி செய்பவர்கள் தினமும் வேர்கடலை எடுத்துக்கொள்வது சிறந்தது.

ஆகவே இரண்டையும் ஒப்பிடும்போது பாதாமின் தோளில் விட்டமின் ஈ சத்து உள்ளது மற்றபடி சத்துக்கள் ஏறக்குறைய சமமாக தான் உள்ளது. ஆனால் பாதாமின் விலையை  ஒப்பிடும்போது வேர்க்கடலையின் விலை குறைவு. அதனால் வேர்க்கடலை தான் சிறந்தது.

Recent Posts

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

26 minutes ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

3 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

3 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

5 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

5 hours ago

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

5 hours ago