முட்டைகளில் எந்த முட்டை நல்லது தெரியுமா? அப்போ இந்த பதிவை படிங்க..!
முட்டை வகைகள் -முட்டைகளில் நாட்டுக்கோழி முட்டை, லேயர் கோழி முட்டை, வாத்து முட்டை ,காடை முட்டை இவற்றை தான் நம் உணவில் அதிகம் எடுத்துக்கொள்வோம். இதில் எந்த முட்டை நமக்கு ஆரோக்கியமானது என்பது பற்றியும் இதய நோயாளிகள் எந்த முட்டையை தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்..
லேயர் கோழி முட்டை மற்றும் நாட்டுக்கோழி முட்டை:
நம் உணவில் அதிகமாக பயன்படுத்துவது லேயர் கோழி முட்டை தான் ,அதாவது தற்போது கடைகளில் கிடைக்கும் முட்டை . இது நாட்டுக்கோழி முட்டையை விட வெண்மை நிறத்தில் இருக்கும். நிறம் என்பது கோழிகளின் காதின் நிறம் மற்றும் மரபணுக்களை பொறுத்து முட்டையின் நிறம் காணப்படும்.
லேயர் கோழிகளுக்கு காது வெள்ளை நிறத்தில் இருக்கும் அதனால் முட்டை வெள்ளையாக இருக்கும். நாட்டுக்கோழிகளுக்கு காது சிவப்பு நிறத்தில் இருக்கும் அதனால் முட்டை பழுப்பு நிறத்தில் உள்ளது. ஆனால் இந்த இரண்டு முட்டைகளுக்குமே சத்துக்கள் ஏறக்குறைய சமமான அளவு தான் உள்ளது.
நிறத்திற்கும் முட்டையின் சத்துக்களுக்கும் சம்பந்தம் இல்லை. புரதம், கொழுப்பு, எனர்ஜி அளவு விட்டமின்கள், தாதுக்கள் போன்றவை சம அளவு தான் காணப்படுகிறது. தற்போது நாட்டுக்கோழிகள் பண்ணையில் சூரிய ஒளிப்படாமல் வளர்க்கப்படுவதால் அதில் விட்டமின் டி சத்து குறைவாகத்தான் இருக்கும். ஆனால் கிராமப்புறங்களில் வெளியில் நடமாட கூடிய கோழிகளுக்கு தான் விட்டமின் டி சத்து அதிகமாக இருக்கும், ஏனென்றால் அது புல் பூச்சிகளை உண்ணும் நேரடியாக சூரிய ஒளியில் வளர்கிறது. மேலும் இந்த நாட்டுக்கோழி முட்டையின் சத்துக்களில் தரம் இருக்கும். ஆகவே பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளை ஒப்பிடும்போது வெளியில் நடமாடக்கூடிய கோழியிலிருந்து பெறப்படும் முட்டை தான் தரமானது.
காடை முட்டை:
காடை முட்டை எடையில் 10 கிராம் தான் இருக்கும் இந்தக் காடை முட்டை 5 சேர்த்தால் தான் ஒரு கோழி முட்டைக்கான சத்து கிடைக்கும் .ஆனால் இதில் உள்ள வைட்டமின்களும் தாதுக்களும் அதிகம். கொலஸ்ட்ராலும் அதிகம், இதனால் இதய நோய் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் காடை முட்டையை தவிர்க்கவும்.
வாத்து முட்டை:
வாத்து முட்டையின் எடை 70 கிராம் வரை இருக்கும் ,கோழி முட்டையை விட 20 கிராம் அதிகமான எடையை கொண்டுள்ளது. இதில் உள்ள சத்துக்களும் அதிகம் தான். விட்டமின்கள் தாதுக்கள் அதிகமாக உள்ளது. கொலஸ்ட்ரால் கோழி முட்டை விட மூன்று மடங்கு அதிகம் உள்ளது, இதனால் இதய நோய் உள்ளவர்கள் முற்றிலும் தவிர்க்கவும்.
எனவே இந்த நான்கு வகை முட்டைகளிலுமே கோழி முட்டை சிறந்தது அதிலும் குறிப்பாக பண்ணையில் வளர்க்கப்படாத வெளியில் நடமாடக்கூடிய கோழியிலிருந்து பெறப்படும் முட்டையை மிகச் சிறந்தது தரமானது.