கூந்தல் வளர்ச்சியை அதிகரித்து முடி உதிர்வதை கட்டுபடுத்தும் காய்கறிகள் என்னென்ன என்பதை பற்றி அறிவீரா ?
இன்றைய இளம் தலைமுறையினர் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் முடி உதிர்வும் ஒன்று. இந்த பிரச்சனையில் ஆண் மற்றும் பெண் என இருபாலரும் பாதிக்க படுகிறார்கள்.
இதனை இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி முடி உதிர்வு பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
கேரட் :
கேரட்டை எடுத்து அவித்து நன்கு மசித்து வேகவைத்த நீரில் குழைத்து தலைமுடியில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து குளித்து வந்தால் முடி வளர்ச்சி அடைவதுடன் முடிஉதிர்வது தடை படும்.
கேரட் மற்றும் 4 பப்பாளி பழ துண்டுகளை நறுக்கி மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.அதனுடன் யோகர்ட் சேர்த்து 15 நிமிடங்கள் தலையில் ஊற வைத்து பின்பு தலைமுடியை நன்கு அலசவும். இவ்வாறு செய்தால் முடி வளர்ச்சி அடைவதுடன் முடி உதிர்வது குறையும்.
வெங்காயம் :
வெங்காயத்தை நன்கு அரைத்து அதில் தேன்கலந்து தலைமுடியில் பூசி அரைமணிநேரம் கழித்து குளித்து வந்தால் வெங்காயம் முடிக்கு தேவையான ஊட்ட சத்துக்களை அளிப்பதுடன் முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை தூண்டும்.
1 கேரட் மற்றும் ஒரு வெங்காயம் எடுத்து நன்கு அரைத்து கொள்ளவும்.பின்பு 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முடியில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து குளித்து வர முடி உதிர்வது தடைபடும்.
பூண்டு :
பூண்டு சாறினை தலைமுடியில் நன்கு படும் படி தேய்த்து அரை மணி ஊற வைத்து நேரம் குளித்து வர முடி நன்கு வளரும்.முடி உதிர்வு தடை படும்.
உருளைக்கிழங்கு :
உருளைக்கிழங்கினை தோல் சீவி தூவி சாறு எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன்,முட்டை வெள்ளைக்கரு மற்றும் சிறிதளவு தண்ணீர் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வர முடிஉதிராமல் இருப்பதுடன் முடி வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். இது முடிக்கு பல விதமான ஊட்ட சத்துக்களையும் கொடுக்கும்.