மஞ்சள்காமாலை என்பது ஒரு கொடிய நோய் தான். இந்த நோய் வந்தவர்களை நாம் பார்க்கும் போது அவர்களது உடல் மிகவும் மெலிதாக காணப்படும். ஏனென்றால் இந்த நோய் நமது உடலில் உள்ள சத்துக்களை உறிஞ்சி, உடலை மெலியப்பண்ணி, நம்மை மிகவும் சோர்வுக்குள்ளாக்குகிறது.
பிறக்கும் குழந்தைகள் முதல் முதுமை நிலையில் உள்ள பெரியவர்கள் வரை இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். மஞ்சள் காமாலை எவ்வாறு ஏற்படுகிறது என்று நாம் அறிந்து கொண்டால், இந்த நோய் நமக்கு ஏற்படாதவாறு காத்துக் கொள்ளலாம்.
காரணங்கள் :
மது பழக்கம் :
மதுவுக்கு அடிமையாக இருப்பவர்கள் உடலில் எந்த நோய் வேண்டுமானாலும் வருவதற்கான வாசல்கள் திறக்கப்பட்ட நிலையில் தான் இருக்கும். மது அருந்துவதால், பல நோய்களை நாமே வரவழைத்துக் கொள்கிறோம்.
மஞ்சள் காமாலை வருவதற்கு மது பழக்கமும் ஒரு முக்கிய காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கை சுத்தம் :
“சுத்தம் சுகம் தரும்” என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அன்றாடம் நாம் பல வேளைகளில் ஈடுபடுகிறோம். பல பொருட்களை நமது கைகளினால் பயன்படுத்துகிறோம். பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் நமது கைகளில் ஒட்டியிருக்கும்.
நமது கைகளை கழுவாமல் உணவு உண்ணும் போது இந்த கிருமிகள் நமது உடலுக்குள் சென்று மஞ்சளை காமாலையை ஏற்படுத்துகிறது. சாப்பிடுவதற்கும் முன்னும், பின்னும் மற்றும் கழிவறையை பயன்படுத்திய பின்னும் கண்ண்டிப்பாக நமது கைகளை கழுவும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.
சாலையோர உணவுகள் :
சாலையோரங்களில் விற்கப்படும் உணவுகளை நாம் விரும்பி விலை கொடுத்து வாங்கி உண்கிறோம். இது நோயை விலை கொடுத்து வாங்குவது தான். சாக்கடை மற்றும் அசுத்தமான இடங்களின் அருகில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கி உண்ணும் போது, அந்த பொருட்களில் பல கிருமிகளின் தாக்கம் இருக்க கூடும். இவை மஞ்சள் காமாலையை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணம் ஆகும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளின் சுத்தம் :
பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் போது கழுவி உண்ண வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பல கெமிக்கல்கள் ஒட்டியிருக்க கூடும். பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவாமல் உண்ணுவதாலும் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
நகம் :
இன்றைய உலகில் நகம் வளர்ப்பது ஒரு நாகரீகமாக மாறி விட்டது. இந்த நகம் வளர்ப்பதால் பல நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நகங்களை வளர்ப்பதால், நகங்களை குடிப்பதாலும் கிருமிகள் நமது உடலுக்குள் சென்று மஞ்சள் காமாலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
சரியான நேரத்திற்கு சாப்பாடு :
நாம் உழைப்பது உண்பதற்காக தான். தினமும் உணவு உண்பதில் சரியாக இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். முக்கியமாக காலை உணவை உண்பதை தவிர்க்க கூடாது. இவ்வாறு நாம் உணவு உண்பதை தவிர்க்கும் போது மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…