புற்றுநோய் என்பது ஒரு காலத்தில் உயிர்கொல்லி நோயாக கருதப்பட்டாலும், இன்று அதற்க்கான மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. வசதி படைத்தவர்கள் இந்த நோயை குணப்படுத்த பணம் செலவழித்து இந்த நோயை குணப்படுத்துகின்றன. ஆனால் நடுத்தர நிலையில் உள்ளவர்கள், ஏழைகள் பணம் செலவழிக்க முடியாத நிலையில், தங்களது உயிரை இழக்க கூடிய நிலை ஏற்படுகிறது.
புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் :
நமது உடலுக்கு பாதிப்பு எப்படி ஏற்படுகிறது என்று நாம் அறிந்து கொண்டால், நாம் அந்த பாதிப்பிலிருந்து எளிதாக தப்பித்து கொள்ளலாம். புற்றுநோய் என்பது நமது உடலில் உள்ள உயிரணுக்களை பாதிக்கும் நோய். இந்த புற்றுநோய் என்பது நமது உடலில் உள்ள உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பை கட்டுப்படுத்தும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றத்தை தான் புற்றுநோய் என்று அழைக்கிறோம்.
புகையிலை பழக்கம் :
புற்றுநோய் தானாக வருவதில்லை. நாமாக வரவழைத்து கொள்வது தான். இன்று அதிமானோர் புகையிலைக்கு அடிமையாகி உள்ளனர். இந்த புகையிலை பழக்கத்தால் பெரிதளவில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகளை நாம் தான் உருவாக்குகிறோம்.
உணவுமுறைகள் :
நமது கலாச்சாரத்தை நாம் மறந்து, என்றைக்கு நாம் மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு மாறினோமோ அன்றே வந்துவிட்டது இந்த உயிர்கொல்லி நோய்கள். நம் முன்னோர்கள் இது போன்ற நோய்களால் பாதிக்கப்படாததற்கு முக்கிய காரணமே, அவர்களது உணவு முறை தான்.
அன்று நமது முன்னோர்கள் இயற்கையான உணவுகளை உண்டார்கள். இன்று நாம் இயற்கையான உணவு முறைகளை தவிர்த்து, பாஸ்ட் புட் போன்ற நமது உடலுக்கு தீங்கு விளைவிக்க உணவுகளை தான் நாம் விரும்பி விலை கொடுத்து வாங்கி உண்கிறோம். புற்றுநோய் உருவாகுவதற்கு இதுவும் காரணமாக உள்ளது.
சூரிய கதிர்வீச்சுகள் :
இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம். இந்த இயற்கையில் ஏற்படும் மாற்றங்களும் நமது உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. சூரியனால் வெளியிடப்படும் கதிர்வீச்சுக்கள் நமது உயிரணுக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உடல் மிகவும் பெலவீனமாக உள்ளவர்களை இந்த கதிர்வீச்சு எளிதில் பாதித்துவிடும். இந்த சூரிய கதிர்வீச்சாலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
மாசு மற்றும் நாம் வேலை செய்யும் முறைகள் :
நாம் வேலை செய்யும் இடங்களும் முறைகளும் நமக்கு புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைகிறது. சிலர் வேலை செய்யும் இடங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள், நச்சு புகைகள் நமது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி புற்றுநோயை விளைவிக்கிறது.
நாள்பட்ட காயங்கள் :
நமது உடலில் ஏற்படும் காயங்களை நாம் மிகவும் சுத்தமான முறையில் அதனை சுத்தம் செய்து, சரியான மருந்துகளை பயன்படுத்தி விரைவில் அந்த புண்கள் குணமாக்குவதற்கு வழி செய்வது தான் சிறந்தது. இல்லையென்றால் இந்த நாள்பட்ட புண்கள் அதில் புற்றுநோய் கிருமிகளை உருவாக்கி, புற்றுநோய் ஏற்படுவத்ற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
பரம்பரை வழியாக வரும் நோய் :
புற்றுநோய் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாகவும் வருகிறது. நமது பெற்றோர்களிடம் ஏற்படுகிற மரபணு மாற்றங்கள் அது தங்களது பிள்ளையும் பாதித்து, பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாகவும் இந்த நோய் ஏற்படுகிறது.
வைரஸ்கள் :
சில வைரஸ்களாலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகிறது. உதாரணமாக எச்.ஐ.வி மற்றும் ஹெபடைட்டிஸ் போன்ற வைரஸ்களாலும் புற்றுநோய் ஏற்படுகிறது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…