இரத்தத்தை சுத்த படுத்துவதற்கு நாம் உட்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பற்றி நீங்கள் அறிவீரா ?
நமது உடலில் அடிப்படை சக்தியாக விளங்குவது நமது இரத்தம்.இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் நமது உடலில் பல வகையான நோய்களும் ஏற்படும் .மேலும் தேவையற்ற அரிப்பு,கல்லீரல் வீக்கம் ,சிறுநீரக கோளாறு மற்றும் பல நோய்களும் நம்மை எளிதில் தாக்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும் சில இயற்கை உணவுகள் எவை என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
நாவற்பழம் :
நாவற்பழம் நமது இரத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டுள்ளதால் அதனை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு பலம் அளிப்பதோடு நமது உடலில் இரத்தத்தின் உற்பத்தியை பெருக்குவதில் பேருதவி புரிகிறது.
பேரிச்சம் பழம் :
பேரிச்சம் பழத்தை எடுத்து தேனில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து தினம் ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்திக்கு உதவி புரியும்.
அத்தி பழம் :
அத்தி பழத்தை முதல் நாள் இரவில் நீரில் ஊறவைத்து மறு நாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வர இரத்தம் சுத்தமாகும்.
முருங்கை கீரை :
முருங்கை கீரையை இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.முருங்கை கீரையை வாரத்திற்கு நான்கு முறை உணவில் சேர்த்து வர இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் உடலில் உள்ள கொழுப்புகளையும் கரைக்கும்.
பீட்ருட்:
பீட்ருட்டை நாம் உணவில் தினமும் எடுத்து கொள்வதால் கல்லீரலில் உள்ள டாக்சின்களை சுத்த படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கேரட் :
கேரட் ஜுஸு டன் தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
எலுமிச்சைப்பழம்:
எலுமிச்சை பழ சாறை நாம் தினமும் எடுத்து கொள்வதால் கல்லீரலில் உள்ள டாக்சின்களை சுத்தபடுத்துகிறது.மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.