உடலை வலுவாக்கும் வாழைக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளது தெரியுமா?

வாழைக்காயில் உள்ள நன்மைகள்.
நம்மில் அதிகமானோர் வாழைப்பழம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் வாழைக்காய் என்றால், அதில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய வாழைக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது பற்றி பாப்போம்
உடல் எடை
மிகவும் மெலிதாக இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க நினைத்து பல வகையான மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை விட, வாழைக்காயை அவியல் செய்து சாப்பிட்டாலே உடல் எடை அதிகரிக்கும். ஏனென்றால், இதில் மாவுசத்து அதிகமாக இருப்பதால் இது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
வயிறு பிரச்சனைகள்
வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை போக்குவதில் வாழைக்காய் முக்கியமான பங்கினை வகிக்கிறது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், அஜீரண கோளாறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் வாழைக்காயை சாப்பிட்டு வந்தால், இதில் உள்ள பொட்டாசியம் சத்து உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.