ஒரு நாளைக்கு எவ்வளவு நட்ஸ் சாப்பிட வேண்டும் தெரியுமா ?

Nuts

Nuts-கொழுப்புச்சத்து நிறைந்துள்ள பருப்பு வகைகளை ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இங்கே காணலாம்.

என்னதான் நட்ஸில் நல்ல கொழுப்பு இருந்தாலும் அது உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்தும்.

நட்ஸ் வகைகளை ஒரு நாளைக்கு 30 கிராம் அளவு எடுத்துக் கொள்வது போதுமானது அதிலும் எண்ணெய்  மற்றும் நெய்யை அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் 30 கிராமை விட குறைவாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.பொதுவாகவே நட்ஸ்  வகைகள் மூளை வளர்ச்சிக்கும், நரம்புகள் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது .

வேர்க்கடலை;

வேர்க்கடலை நமக்கு எளிதில் கிடைக்கக்கூடியது . இதில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், கோலின், புரதம் ,கொழுப்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது .இது மூளை வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் .

வளரும் குழந்தைகள், உடல் எடை குறைவாக இருப்பவர்கள் ,கர்ப்பிணி பெண்கள் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்வது நல்லது. வேர்க்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ எடுத்துக் கொள்ளலாம் பச்சையாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பாதாம் பருப்பு;

பாதாம் பருப்பு கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடியது. தினமும் 5 பாதாம் பருப்புகள் எடுத்துக் கொள்வதே போதுமானதாகும்.சருமத்தை பொலிவாகவும் அழகாகவும் வைத்து கொள்ளும் .

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம் .சர்க்கரை நோயாளிகள் இரண்டு பாதாம் பருப்பை ஊறவைத்து பிறகு எடுத்துக் கொள்ளவும்.

முந்திரி;

முந்திரி பருப்பில் விட்டமின்கள், தாதுக்கள் ,கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது .இதை உடல் எடை குறைவாக இருப்பவர்கள் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு பருப்புகள் எடுத்துக் கொள்ளலாம். இதில்  கொழுப்புச்சத்து அதிகம் உள்ளதால் உடல் பருமன் உள்ளவர்களும் இதய நோயாளிகளும் தவிர்க்க வேண்டும்.

பிஸ்தா;

பிஸ்தா சரும  நோய்களை வராமல் தடுக்க கூடியது.சருமத்திற்கு பளபளப்பை தரும் . இதில் கால்சியம் மற்றும் தாதுக்கள், புரதம் அதிகம் உள்ளது .கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து  நான்கு பருப்புகள் எடுத்துக் கொள்ளலாம்.

அக்ரூட்;

இதில் மீன்களைப் போலவே ஒமேகா 3 அமினோ அமிலம் அதிகம் உள்ளது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .ரத்தம் உறைதலை தடுக்கும் தன்மையும் கொண்டது.

இதய நோயாளிகள் ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று வீதம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்துக் கொள்வது சிறந்தது.

இது போன்ற நட்ஸ் வகைகளில் கொழுப்புகள் அதிகம் இருப்பதால் ஒரு நாளைக்கு தேவையானவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் .அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்