நெல்லிக்காயில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பற்றி நீங்கள் அறிவீரா !
நெல்லிக்காயில் இருக்கும் அதிகமான சத்துக்கள் நமது உடலில் இருக்கும் பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்த மிகவும் நல்லது. இதனை வட மொழியில் ஆம்லா என்று அழைக்கின்றனர்.
நெல்லிக்காயில் அதிகஅளவு ஆண்டி ஆக்சிடண்டுகள், கால்சியம் ,வைட்டமின் சி இருப்பதால் அது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. நெல்லிக்காயில் இருக்கும் அதிக அளவிலான மருத்துவகுணங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
உடற்பருமன் :
நெல்லிக்காயில் இருக்கும் அதிக அளவு ஆண்டி ஆக்சிடண்டுகள் உடலில் இருக்கும் அதிக படியான கொழுப்புகளை கரைத்து உடற்பருமனை குறைக்கிறது.
கண்பார்வை :
நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிகஅளவில் இருப்பதால் அது கண்பார்வையை குணப்படுத்துகிறது.நெல்லிக்காயை சாறு எடுத்து அதில் தேன் கலந்து குடித்து வர அது கண் பார்வையை சீராக இருக்கும்.
இதயநோய் :
நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அது இதயம் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்த வல்லது. நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டு வந்தால் ஞானசக்தியை அதிகரிக்கும்.
மலசிக்கல் :
தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அது நமக்கு மலசிக்கல் வராமல் தடுக்கிறது. மேலும் மூல நோயை குணபடுத்துகிறது.
இரத்த சோகை :
நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிப்பதோடு இரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது.