உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கா?. அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்….
அடிக்கடி சிறுநீர் கழித்தல் -ஒரு சிலருக்கு தும்மினால் இருமினால் ஏன் சிரித்தால் கூட சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். மேலும் ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் என்ற சந்தேகமும் ,அடிக்கடி சிறுநீர் வருவது சரியா என்றும் பலருக்கும் ஏற்படும் சந்தேகத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்…
சிறுநீர் கழிப்பது மிக மிக இன்றியமையாத உடலின் செயல்பாடு ஆகும். பல கழிவுகள் நம் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் அதில் சிறுநீர் வெளியேற்றம் என்பது உடலும் உயிரும் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய செயல்பாடாகும்.
பொதுவாக 12 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் 5-7 முறை சிறுநீர் கழிப்பது சரியானது, இதை சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஆறு முறை சிறுநீர் கழிப்பது இரு முறை மலம் கழிப்பது உடலுக்கு நல்லது. காலை எழுந்தது முதல் மறுநாள் காலை எழுந்திருக்கும் வரை இதை கணக்கில் கொள்ள வேண்டும். இது ஆறு முறையை தாண்டினால் அல்லது ஐந்து முறைக்கு கீழ் சிறுநீர் கழித்தால் சற்று யோசிக்க வேண்டும்.
எப்போது அதிகமாகலாம் தெரியுமா?
நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் கூட அதிக சிறுநீர் வருவதற்கு ஒரு காரணமாகலாம். குளிர்காலம், மழை காலம் போன்ற சூழ்நிலைகளும் நம்மைச் சுற்றி வெப்பநிலை குறைவாக இருக்கும் போதும் அதிகமாக சிறுநீர் கழிக்க தூண்டலாம் இதனால் பயப்படத் தேவையில்லை. ஆனால் இந்த சூழ்நிலைகள் ஏதும் இல்லாமல் உங்களுக்கு சிறுநீர் அடிக்கடி வந்தால் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நோயின் விளைவாக சிறுநீர் எப்போது அதிகமாகும் தெரியுமா?
உடலில் ரத்த சர்க்கரையின் அளவு உணவு உண்டபின் 150 தாண்டுகிறது என்றால் பாலி யூரியா என்ற அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுதல் நிலை ஏற்படும்.
சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் கூட அதிகமாக சிறுநீர் வெளியேறலாம், மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் கிருமி தொற்றால் கூட அதிக சிறுநீர் வெளியேறும். இந்த கிருமி தொற்றால் ஏற்படக்கூடிய சிறுநீர் வலி அல்லது எரிச்சலுடன் வெளியேறும்.
ஐந்து முறைக்கு குறைவாக சிறுநீர் வந்தால் என்ன செய்வது?
நீர் அகாரம், இளநீர், பழ சாறு போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம் இவற்றை எடுத்துக்கொண்டும் குறைவாக சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும்.
ஒரு சிலருக்கு தும்மும் போதும் இரும்பினாலோ இன்னும் ஒரு சிலருக்கு சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் இந்த நிலை பொதுவாக பெண்களுக்கு அதிகம் ஏற்படும் அவர்களின் உடல் எடை அதிகம் மற்றும் குழந்தை பிறந்த பிறகு இந்த தொந்தரவு ஏற்படலாம். ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் ஏற்பட்டிருந்தால் கூட வரலாம் மேலும் வயது முதிர்வு அடைந்தால் பிளாடர் திக்னஸ் ஏற்படும் இதனாலும் ஏற்படும்.எனவே யூரின் அனாலிஸ் பரிசோதனை மற்றும் சிறுநீரகத்தை ஸ்கேன் செய்து பரிசோதித்து கொள்ள வேண்டும்.
எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
நம் உணவில் அதிகமான கொட்டை வகைகள், கொண்ட கடலை போன்ற பயிறு வகைகள் தேங்காய் போன்ற நரம்புச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை நாம் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆகவே ஐந்து முறைக்கு குறைவாக சிறுநீர் கழித்தாலோ அல்லது எட்டு முறைக்கு மேல் சிறுநீர் கழித்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான தீர்வை காண வேண்டும்.