உங்களுக்கு சர்க்கரை இருக்கா? இதோ உங்களுக்கான இட்லி ரெடி..
Diabetic food-இட்லி என்பது நம் உணவில் பிரதானமான உணவாகிவிட்டது. முந்தைய காலத்தில் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே செய்யப்பட்ட ஒரு உணவு, பிறகு வாரம் ஒரு முறை செய்யப்பட்டு இன்று இட்லி இல்லாத நாளே இல்லை என்று ஆகிவிட்டது. இது ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு சரியாக இருக்கும் ஆனால் சர்க்கரை நோயாளிகள் அரசியல் செய்யப்பட்ட இட்லி வகைகளை தவிர்ப்பது நல்லது அதற்கு மாற்றாக இந்த முறையில் செஞ்சு பாருங்க சர்க்கரையின் அளவும் படிப்படியாக குறைந்து விடும்.
தேவையான பொருட்கள்:
- ராகி மாவு =1, 1/2கப்
- உளுந்து =அரை கப்
- அவல் =அரை கப்
- வெந்தயம் =1 ஸ்பூன்
செய்முறை:
உளுந்தை ஊற வைத்து அதனுடன் வெந்தயம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் பின்பு அவளுடன் ராகி மாவையும் சேர்த்து அரைத்து உளுந்து மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு மூடி வைத்துவிட வேண்டும். பிறகு மறுநாள் காலையில் அதை இட்லியாக செய்து காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஹை கிளைசிமிக் குறையீடு இல்லாத உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அரிசியில் ஹை கிளைசிமிக் உள்ளது இதனால் தான் அரிசி இட்லியை தவிர்க்க வேண்டும்.
ராகி
ராகி சேர்த்து நாம் செய்துள்ள இட்லியில் குறைந்த கிளைசிமிக் தான் உள்ளது எனவே சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இதை எடுத்துக் கொள்ளலாம் இது மட்டுமல்லாமல் பச்சைப்பயிறு அவித்து கூட காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
அவல்
நாம் அனைவரும் மறந்த உணவு என்றால் அது அவல் தான். இதிலும் குறைந்த கிளைசிமிக் தான் உள்ளது. நாம் செய்துள்ள இந்த இட்லியில் அவலும் சேர்த்தே செய்துள்ளோம் இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது சத்துமிக்க உணவாகும். சிலருக்கு இட்லி எடுத்துக் கொண்டால்தான் அந்த நாளை முழுமையாக இருக்கும் இப்படிப்பட்ட நபர்களுக்கு ஒரு வேலை சர்க்கரை வந்து விட்டால் இந்த ராகி இட்லி ஒரு மாற்று உணவாக இருக்கும் எனவே அடிக்கடி நம் உணவுகளில் சிறு தானியங்களை ஒரு வேலை உணவாக எடுத்துக் கொண்டால் சர்க்கரை கட்டுக்குள் வைக்கப்படும்.