இன்றைய நவீனமயமான காலகட்டத்தில் மக்கள் பல அநாகரிகமான செயல்களையே நாகரிகமாக கருதுகின்றனர். நமது முன்னோர்களின் காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த பல பழக்கவழக்கங்கள் இன்றைய காலகட்டத்தில் அவை அநாகரீகமாக கருதப்படுகிறது. இப்போது பரவி வருகிற நோய்கள் அப்போது இல்லை. ஆனால் நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இல்லாத, பெயர் அறியாத நோய்கள் எல்லாம் இப்போது பரவி வருகிறது.
மண்பானையில் மகத்துவம் வெயில்காலங்களில் தான் தெரியும். ‘வெயில் காலம் வந்துவிட்டாலே மண் பானை விற்பனையை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. குளிர்ச்சியான தண்ணீர் வேண்டும் என்று நினைக்கிற எளிய மக்களின் இனிய தேர்வாகவும் மண்பானை இருக்கிறது. இந்த மண்பானை நீர் உடலுக்குக் குளிர்ச்சி மட்டும் தருவதில்லை. பல நன்மைகளையும் தருவதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
முன்னோர்களின் நாகரிக முறை மிக சிறந்ததாகவே இருந்துள்ளது. காலம்காலமாகவே நம்முடைய முன்னோர்கள் சமையலுக்கும், தங்களுடைய மற்ற தேவைகளுக்கும் மண்பானையை உபயோகப்படுத்தி வந்திருக்கின்றனர். முக்கியமாக கஷாயம் போன்ற மருந்துப் பொருட்களைத் தயாரிக்க மண்பானைதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதிலிருந்தே மண்பானையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.
மண்பானை நமக்கு குளிர்ச்சியான தண்ணீரை தருவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும் தருகிறது. மண்பானை நீர் தாகம் தணிப்பதோடு மட்டுமில்லாமல், உடலில் ஏற்படுகிற பல பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மையும் கொண்டது. ஆரோக்கியத்துக்கும் உகந்தது.
மண் பானை நீர் இயற்கையான முறையில் உடலை குளிர்ச்சியாக்குகிறது. கோடையில் ஏற்படுகிற நா வறட்சி, உடல் நீர் இழப்பு போன்றவற்றைத் தடுக்கிறது. உடலுக்கு நோயை ஏற்படுத்துகிற வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களையும் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
மண்பானையை உபயோகப்படுத்துகிறவர்கள் குளிர்ச்சியான நீர் வேண்டும் என்பதற்காக நாகரிகம் என்ற பெயரில் பெயின்ட் அடித்து உபயோகிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். ஒரு சிலர், பானையின் உட்புறத்திலும் பெயின்ட் அடிக்கின்றனர். இவ்வாறு செய்வது பார்ப்பதற்கு வேண்டுமானாலும் அழகாகத் தெரியலாம். ஆனால், இதனால் மண்பானையின் பயன் எதுவும் கிடைக்காது. மேலும், பானையின் வெளிப்புறத்தில் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறுசிறு துவாரங்கள் வழியே நீர்த் திவலைகள் வெளிப்படுவதும் தடைபடும்.
முதல் தடவையாக, மண்பானை நீரை குடிப்பவர்களுக்கு தொண்டை கட்டுதல், சளி மற்றும் மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றால் அவதிப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகளை எல்லாம் நினைத்து மண்பானை தண்ணீரை தவிர்த்துவிடக் கூடாது. இது கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும்.
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…
புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக…
காஞ்சிபுரம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அளிக்காததை…