உங்களுக்கு அல்சர் பிரச்னை உள்ளதா? அப்ப நீங்க இதெல்லாம் சாப்பிட கூடாது?
இன்றைய நவீனமயமான உலகில், பெருகி வரும் மேலை நாட்டு உணவு கலாச்சாரம் மக்களின் உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக கெடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நமது தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளில் அதிகரித்த அதிகமான நாட்டத்தின் காரணமாக தான் இப்படிப்பட்ட நோய்கள் எல்லாம் ஏற்படுகிறது.
தற்போது இந்த பதிவில், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிட கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
காரமான உணவுகள்
அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் காரசாரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வயிற்றுப்புண் பாதிக்கப்பட்டவர்கள் இந்த உணவுகளை சாப்பிடும் போது கடுமையான வயிற்றுவலி ஏற்படும்.
பால்
வயிற்றுப்புண் பிரச்னை உள்ளவர்கள், பால் குடிப்பது நல்லது என பலரும் கூறுவதுண்டு. ஆனால், வயிற்றுப்புண் பிரச்சனை உள்ளவர்கள் பால் குடிப்பது நல்லதல்ல. பால் வயிற்றில் உள்ள அமில தன்மையை மேலும் அதிகரிக்க செய்கிறது. எனவே, பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ரெட் மீட்
நமது உணவில் ரெட் மீட்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதில் உள்ள கொழுப்பு மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் நோயின் வீரியத்தை அதிகரிக்க செய்கிறது.
குளிர்பானங்கள்
வயிற்றுப்புண் பிரச்சனை உள்ளவர்கள் சோடா மற்றும் குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது வயிற்றுப்புண்ணை மேலும், தூண்டி விடுகிறது.
மதுப்பழக்கம்
வயிற்றுப்புண் பிரச்னை உள்ளவர்கள், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால் அப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். இப்பழக்கம் தொடர்ந்தால், மேலும் பல பிரச்சனைகளை ஏற்படக் கூடும்.