வெண்பூசணி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா….?

eating pumpkin lose weight

வெண்பூசணி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட காய். இதற்க்கு சாம்பல் பூசணி, கல்யாண பூசணி என்ற பெயர்கள் உண்டு. இது, பொங்கல் காலகட்டத்தில் அதிக அளவில் விளையும். நுண்கிருமிகளை தடுக்க கூடிய தன்மையும் இதற்கு உண்டு. வெண்பூசணியின் அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் உண்டு.

கல்லீரல் :

வெண்பூசணியை பயன்படுத்தினால் இதயத்தை பலப்படுத்தும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும், கல்லீரல் பலவீனமாவதை தடுத்து பலப்படுத்தும். வெண்பூசணியில், ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், நீர்சத்து மிகுதியாக உள்ளது.

அல்சர் :

வெண்பூசணியை அல்சர் உள்ளவர்கள் தினமும் எடுத்து கொண்டால் அல்சர் சரியாகும். இரத்தத்தை உறைய வைக்கும் தன்மை வெண்பூசணிக்கு உள்ளது. இரத்த மூலத்துக்கு இது மருந்தாக உள்ளது.

வயிற்று பூச்சி :

வெண்பூசணியின் விதையை பயன்படுத்தி சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம். வெண்பூசணி விதைகள் 10 வரை எடுத்து லேசாக நசுக்கி அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் அளவு  நீர்  விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

உடல் எடை :

காய்கறிகாரிகளில் வெண்பூசணி தான் பெரிய காய்கறியாகும். ஆனால் இதை சாப்பிட்டால் நாம் எவ்வளவு பெரிய உடம்பை வைத்திருந்தாலும் உடல் இளைத்துவிடும். இந்த வெண்பூசணி சாற்றில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது.

வயிற்று புண் :

வெண்பூசணி சாற்றை தினமும் பருகி வந்தால் வயிற்றுப்புண்கள் ஆறும். உடலில் உள்ள வெப்பத்தை போக்குகிறது. சிறுநீர்ப்பிரச்சனைகளை அகற்றிவிடும். கற்களை கரைக்கவும் உதவும். தினமும் இதனை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்