உங்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கணுமா? அப்ப இதை பண்ணுங்க!
ஞாபக சக்தி அதிகரிக்க சில வழிமுறைகள்.
இன்று மிகவும் சிறிய வயதில் உள்ளவர்களுக்கு கூட ஞாபக சக்தி என்பது மிக குறைவாகத்தான் உள்ளது. ஆனால் அன்றைய நம்முடைய முன்னோர்களின் ஞாபக சக்தியை பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இன்றைய சிறுவர்கள் முதல் இளம் தலைமுறையினர் வரை அனைவருக்குமே ஞாபக சக்தி என்பது மிகவும் குறைவாக தான் உள்ளது. தற்போது இந்த பதிவில் ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
வல்லாரை கீரை
இன்று பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கவலை என்னவென்றால் எவ்வளவு படித்தாலும் மனதில் பதிவதில்லை, ஞாபகம் இருப்பதில்லை மறந்துவிடுகிறார்கள் எனது குழந்தைகள் என்று தான் கவலைப்படுகின்றனர். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க வல்லாரை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தூதுவளை
தூதுவளை என்பது பல நோய்களுக்கு மருந்தாக இருந்தாலும், ஞாபக சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. ஞாபகசக்தி குறைபாடுள்ளவர்கள் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக அரைத்து உணவில் சாதத்தோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
செம்பருத்தி பூ
செம்பருத்தி பூவை நாம் வெறும் பூவாக மட்டும் பார்க்காமல், அதில் நமது உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கக் கூடிய பலவிதமான சத்துக்கள் உள்ளது. அந்த வகையில் இந்த செம்பருத்திப் கீரையை நடுவில் உள்ள மகரந்தத்தை நீக்கிவிட்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிப்பதற்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.
தேன்
சில பெற்றோர்கள் படிப்பது ஞாபகத்தில் இருப்பதற்காக குழந்தைகளை காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பி விடுவது வழக்கம். இவ்வாறு செய்வது நல்ல பழக்கம் என்றாலும், அவர்களது ஞாபக சக்தி அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு காலையில் எழுந்த உடனே வெந்நீரில் தேனை கலந்து தினமும் காலையில் குடிக்க கொடுத்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.