உங்களுக்கு ரத்தில் கொழுப்பு அதிகம் இருக்கா.? அப்போ கண்டிப்பா இந்த ஜூஸ் குடிங்க..!
ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருந்தால் பல பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கு.ம் இந்த கொழுப்பை இயற்கையான முறையில் குறைக்க பழச்சாறு செய்வது எப்படி அவற்றை யாரெல்லாம் குடிக்கக்கூடாது மற்றும் அதன் பயன்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
பழச்சாறு செய்யும் முறை
இஞ்சி ஒரு துண்டு தோல் நீக்கியது ,விதை உள்ள கருப்பு திராட்சை ஒரு கைப்பிடி அளவு மற்றும் நெல்லிக்காய் ஒன்று இவற்றை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி சிறிதளவு சுத்தமான தேன் வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம் .
பெரிய நெல்லிக்காய்
நெல்லிக்காயை வைத்து பல சித்தா ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகிறது இது ஆயிலை அதிகரிக்கக் கூடிய மிகப்பெரிய ராஜகணியாகும் மேலும் இளமையாக வைத்துக் கொள்ளவும் உதவும் குறிப்பாக இதய நலனை பாதுகாக்கும்.
விதை உள்ள கருப்பு திராட்சை
தற்போது மார்க்கெட்டுகளில் விதை இல்லாத திராட்சைகளும் உள்ளது அவற்றை தவிர்ப்பது சிறந்தது. இந்த விதை உள்ள திராட்சை ட்ரை கிளிசராய்டு என சொல்லக்கூடிய அதிக கொலஸ்ட்ராலை வெளியேற்றும் தன்மையைக் கொண்டது.
இஞ்சி
இஞ்சி சமையலுக்கு மட்டுமல்லாமல் பல மருத்துவ பலனை கொண்டுள்ளது .
தவிர்க்க வேண்டியவர்கள்
அல்சர் புண் மற்றும் வயிறு எரிச்சல் உள்ளவர்கள் இந்த தவிர்க்கவும்
எடுத்துக்கொள்ளும் முறை
அல்சர் புண் இல்லை என்றால் காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது சிறந்தது அல்லது. இரு உணவுக்கு இடைப்பட்ட நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிலருக்கு காலை நேரத்தில் எடுத்துக் கொண்டால் ஒவ்வாமை போன்றவை ஏற்படும் இவ்வாறு இருந்தால் உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை, ஆப்பிள் சைடர் வினிகர் போன்றவற்றை தவிர்ப்பது சிறந்தது. 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உடல் எடை அதிகமாக இருந்தாலும் இந்தச் சாறு எடுத்துக் கொள்ளும் போது மிகச்சிறந்த பலனை கொடுக்கும். இந்த பானத்தை வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு சிலருக்கு இஞ்சியால் வயிறு எரிச்சல் ஏற்பட்டால் இஞ்சியை இரவே அரைத்து தண்ணீர் சேர்த்து வைத்து விட வேண்டும் மறுநாள் காலை மேலே உள்ள நீரை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். கீழே உள்ள நீரை தவிர்த்து விடுவது சிறந்தது. ரத்தக்குழாய் அடைப்புக்கு மருந்து எடுப்பவர்களும் இந்த பானத்தை எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். எனவே இந்த பானத்தை தொடர்ந்து எடுத்துக் கொண்டாள் உங்கள் இதயம் சீராக இருக்க ஏதுவாக அமையும்.