உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கா ?அப்போ இந்த பழத்தை சாப்பிடுங்க.!

musk melon

முலாம் பழம்– முலாம் பழத்தின் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று இப்பதிவில் காணலாம்.

முலாம் பழத்தின் நன்மைகள்:

முலாம் பழத்தை கிர்ணி பழம் என்றும் கூறுவார்கள். இந்த பழம் இதயம் மற்றும் நுரையீரலை வலுப்படுத்துகிறது.

இதயம்

முலாம்பழத்தில் அடினோசின் என்ற வேதிப்பொருள் இயற்கையாகவே உள்ளது. மேலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது, இதனால் ரத்த ஓட்டம் சீராக்கப்படும். மேலும் ரத்த நாளங்களில் இறுக்கம்  ஏற்படாமல் பாதுகாக்கும். இந்த பழத்தின் விதைகளை காய வைத்து சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம்.

நுரையீரல்

நுரையீரலில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்திகரிக்கும் தன்மை இந்த முலாம் பழத்திற்கு உள்ளது. இதனால் புகைப்பிடிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பழமாகும். மேலும் நுரையீரல் புற்றுநோய் வராமலும் பாதுகாக்கும்.

கண்கள்

முலாம்பழத்தில் கரோட்டின் அதிகமாக இருப்பதால் கண்புரை ஏற்படாமல் பாதுகாக்கும்.அல்சர் புண்களை விரைவில்  ஆற்றக்கூடிய தன்மையும் இந்த பழத்திற்கு உள்ளது.

மன அழுத்தம்

முலாம்பழம் மன அழுத்தத்தை குறைக்கவும், தூக்கமின்மையை சரி செய்யவும் சிறந்த பழம் ஆகும். இதில் உள்ள போலேட் கருவில் இருக்கும் குழந்தையின்  ஆரோக்கியத்திற்கு நல்லது .ஆகவே  கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய பழங்களில் இதுவும் ஒன்று.

சருமம்

கொலாஜின் என்ற புரதக் கலவை உள்ளதால் சரும திசுக்களை பாதுகாக்கிறது. மேலும் சருமத்தில் உள்ள காயங்களை விரைவில் ஆற்றவும் செய்கிறது.

சிறுநீரகம்

சிறுநீரகத்தில் ஏற்படும் புண்களை குணமாக்க வல்லது. மேலும் எலுமிச்சையுடன் இந்த பழத்தை சேர்த்து சாப்பிடும் போது கீழ்வாதம் குணமாகிறது.

தவிர்க்க வேண்டியவர்கள்:

குறைந்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் இந்த பழத்தை வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் ஆஸ்துமா, மூட்டு வலி ,மூட்டு தேய்மானம் உள்ளவர்களும் தவிர்க்கவும்.

எனவே நமது இதயமும், நுரையீரலும் ஆரோக்கியமாக இருக்க வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறையாவது முலாம் பழத்தை எடுத்துக்கொள்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்