வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

plant

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம்.

தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும் இடமெல்லாம் அடுக்குமாடி கட்டிடங்களாக மாறி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு, தண்ணீர் பற்றாக்குறை என பல பிரச்சனைகளை நாம் சந்தித்து வருகிறோம்.

ஆனால் ஒரு சிலரோ வீட்டுக்குள்ளேயே சில செடிகளை வளர்த்தும்  வருகின்றனர் இது வரவேற்கத்தக்கது தான் .இதனால் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது என ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

வீட்டிற்குள் செடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்:

வீட்டிற்குள் செடி வளர்பதால் 70% மன அழுத்தம் குறையும். நேர்மறை எண்ணங்கள் தூண்டப்படும் .மனம் ஒருநிலைப்படும் ஆற்றல் அதிகரிக்கும். நுரையீரல் தொற்று ஏற்படுவது தடுக்கப்படும்.

காற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை இந்த செடிகளுக்கு உள்ளது .சுத்தமான காற்றை கொடுக்கவல்லது. மேலும் ரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.  வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

வீட்டிற்குள் வளர்க்க வேண்டிய செடிகள்:

கற்றாழை

கற்றாழை காற்றில் உள்ள பென்சின் மற்றும் பார்மால்டிஹெட் என்ற நச்சுக்கிருமிகளை அகற்றக் கூடியது. ஆனால் இது நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு நச்சுத்தன்மை ஏற்படுத்தக் கூடியது.

மணி பிளான்ட்

மணி பிளான்ட்  வளர்ப்பதால் பணம் பெருகும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது .இது எந்த அளவுக்கு உண்மை என்பதில் சந்தேகம் தான் .ஆனால் பண விரயம் ஏற்படாது ,குறிப்பாக ஆரோக்கிய செலவு ஏற்படாது .

இது காற்றில் உள்ள  பார்மால்டிஹெட் ,பென்சின், டோலுவின் , சைலின் போன்ற நச்சுக்களை அகற்றும்  தன்மை கொண்டது. சுத்தமான காற்றை கொடுக்கும் .மேலும் மன அழுத்தத்தை குறைக்கக்கூடியதும் ஆகும்.

ஸ்நேக் பிளாண்ட்

ட்ரைகுளோரோ எத்திலின் , பென்சின் ,டோலுவின், சைலின் போன்ற காற்றில் உள்ள நச்சுக்களை அழிக்கக்கூடியது.இது வளர சிறிய வெளிச்சம் தேவைப்படும்.

ஸ்பைடர் பிளான்ட்[spider plant]

இது காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுக்களை அகற்றி சுத்தமான காற்றை கொடுக்கிறது 2021 ஆராய்ச்சியின் படி ரத்தத்தில் உள்ள கார் பாக்சிங் அளவை குறைக்க கூடியதாகும்.

லேடி பாம்[lady palm]

இந்த வகை செடியானது காற்றிலுள்ள அம்மோனியா,டோலுவின், சைலின் போன்ற நச்சுக்களை  அகற்றக் கூடியது. இது சூரிய ஒளி இல்லாத இடங்களிலும் வளரும்.

எனவே இந்த வகை செடிகள் காற்றில் உள்ள நச்சுக்களை அகற்றும் என்று நாசா 1989இல் கிளீன் ஏர் ஸ்டடி[clean air study] மூலம் கூறியுள்ளது. மேலும் நூறு சதுர அடிக்கு ஒரு செடியாவது வளர்க்க வேண்டும் எனவும் கூறுகிறது .

ஆகவே நம்முடைய மனநிலையும் உடல் நிலையும் ஆரோக்கியமாக இருக்கவும் இயற்கையுடன் ஒன்றி வாழவும் நாம் இந்த குறிப்பிட்ட வகை செடிகளையாவது கட்டாயம் வளர்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy