Headache : வெயில் காலத்தில் வரும் தலை வலியின் காரணங்களும் அதற்கான தீர்வுகளையும் பற்றி இதில் பார்ப்போம்.
இந்த வெயில் காலத்தில் நம்மில் பல பேருக்கு வரக்கூடிய ஒன்று தான் இந்த தலை வலி. அதிலும் குறிப்பாக இந்த வெயில் காலத்தில் காரணமே இல்லாமல் தலை வலி வரும் என்று நினைத்து அது சாதாரண தலை வலி என்று நாம் மெடிக்கல்லிருந்து மாத்திரை வாங்கி உட்கொள்வோம் அந்த தலை வலி தற்காலிகமாக சரி ஆகி விடும்.
அதன் பின் மீண்டும் தலை வலி ஏற்படும் நாம் மீண்டும் மாத்திரை சாப்பிடுவோம் இப்படி என்ன காரணம் என்றே தெரியாமல் தலை வலிக்கு மாத்திரை சாப்பிடுவதால் தலை வலி சரி ஆக போவதில்லை. தலையில் எந்த இடத்தில் வைக்கிறது என்று தெரிந்து கொண்டு அதற்கான காரணம் என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கான தீர்வை செய்ய வேண்டும். நமக்கு வரும் தலை வலிக்கு நிறைய காரணங்கள் உண்டு அதை பற்றியும் அதற்கான தீர்வை பற்றியும் நாம் இந்த பதிப்பில் பார்ப்போம்.
டென்ஷன் தலைவலி :
நாம் அதிகம் டென்ஷன் ஆனால் நமது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் வேகமாக அதிகரிக்கும் இதனால் நெற்றி பகுதியை சுற்றி தலை வலி ஏற்படும் இப்படி ஏற்பட்டால் அதற்கு ஒரே தீர்வு நாம் அதிகமாக கோவப்படாமலும், எதற்கு எடுத்தாலும் டென்ஷன் ஆகமலும் இருக்க வேண்டும். இதை செய்தலே நமக்கு இந்த தலை வலி வராது. இது ஒரு சாதாரண தலை வலி தான் நாம் பயப்படும் அளவிற்கு ஒன்றும் ஆகாது.
ஒற்றை தலைவலி :
தலையில் ஒற்றை பகுதியில் மட்டும் தாங்க முடியாத அளவிற்கு வலி ஏற்ப்படும் இந்த வலி வருவதற்கான காரணம் என்னவென்றால் உடம்பிற்கு ஒத்துக்காத உணவுகளை சாப்பிடுவதால் மூளையின் ரத்த நாணங்களில் ஏற்படும் மாற்றத்தால் இந்த தலை வலி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு ஆரோக்கியம் இல்லாத உணவுகளை தவிர்த்தாலே போதுமானதாகவும்.
சைனஸ் தலைவலி :
இந்த தலை வலி சற்று வித்தியாசமாக நமது கண்ணம், கண்களை சுற்றியும் மற்றும் மூக்கை சுற்றியூம் வலி ஏற்படும். இந்த தலை வலி சைனஸின் தொற்று காரணமாக ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக நாம் சிறிதளவு மஞ்சள் பொடியும், கல் உப்பும் போட்டு ஆவி பிடித்தால் போதுமானது. இதுவும் ஒரு வகையான சாதாரண தலை வலி தான்.
மொபைல் போன் மூலம் ஏற்படும் தலைவலி :
இந்த தலைவலி அதிகம் கணினியின் முன் அமர்ந்து வேலை செய்வோருக்கும், மொபைல் போன் அதிக நேரம் உபயோகிப்பதாலும் ஏற்படுகிறது. இந்த தலை வலி கண்களுக்கு மட்டும் நாம் அதிக நேரம் அழுத்தம் கொடுத்து மொபைல், கணினி திரையை பார்ப்பதால் ஏற்படும். இதன் விளைவாக கண்களை சுற்றிலும், நெற்றியிலும் அதிகமாக வலி ஏற்படும். இதற்கு தீர்வாக நாம் அதிக நேரம் கணினி முன்பிலோ இல்லை மொபைல் முன்னிலோ இருப்பதை தவிர்க்க வேண்டும்.
வாதம் மற்றும் பித்த தலைவலி :
நம் உடம்பில் அதிக வாதம் ஏற்பட்டால் இந்த தலை வலி வரலாம். இந்த தலை வலி, மொத்த தலையும் சுற்றி வலிக்கும் மேலும், காதின் உட்புறம் ஏதோ ஊறுவது போல இருக்கும். இதற்கு தீர்வாக மஞ்சள் மட்டும் கல் உடுப்பு சேர்த்து கொதிக்க விட்டு அதில் ஆவி பிடிக்கலாம் அது சரியாகவில்லை என்றால் அகத்தி இல்லை சாரின் சொட்டை இரண்டு மூக்குகளிலும் விட்டால் தலை வலி சரியாகும்.
நாம் வெயிலில் அதிகம் சுற்றினால் பித்த தலை வலி ஏற்படும், இது பெரும்பாலும் உடல் உஷ்னம் அதிகரிப்பதால் ஏற்படும். நெற்றியை சுற்றிலும் இந்த தலை வலி ஏற்படும் இதற்கு தீர்வாக நமது உடல் சூட்டை தணிக்கும் தண்ணீர் சத்துள்ள பழங்கள், பழச்சாறுகள் சாப்பிட்டாலே இந்த தலை வலி சரி ஆகி விடும்.
கபத்தால் ஏற்படும் தலைவலி :
இது பெரும்பாலும் உடலில் கெட்ட நீர் உள்ளதால் ஏற்படும் குறிப்பாக தலை குளித்து விட்டு தலையை சரியாக துவட்டாவிட்டால் தலையில் நீர் இறங்கி வலி ஏற்படும். இந்த வலி தலையை சுற்றியும் வலிக்கும் மேலும் தலை மீது அதிக கணம் உள்ள பொருளை வைத்தது போல தலை கணமும் இருக்கும். இதற்கு தீர்வாகவும் மூலிகைகள் நிறைந்த தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஆவி பிடித்தால் போதுமானது.
மன அழுத்ததால் ஏற்படும் தலைவலி :
நாம் தேவை இல்லாத சிந்தனைகளில் அதிகமாக சிந்திக்கும் பொழுதும், மன அழுத்தம் தரும் தேவை இல்லாத விஷயங்களை சிந்திப்பதால் இந்த தலை வலி ஏற்படும். இந்த தலை வலி தலையின் பின்புறத்தில் பின் கழுத்திற்கு மேல் ஏற்படும். இதனால், பின் தலையில் கனமான உணர்வு ஏற்பட்டு மிகுந்த தலை வலியை உண்டாக்கும்.
இதற்கு எளிதான தீர்வு தூக்கம் தான் நன்றாக தூங்கி ஓய்வு எடுத்தாலே இந்த தலை வலியானது குறைந்து விடும். மேலும், தேவை இல்லாத மன உளைச்சல் கொடுக்கும் எதையும் சிந்திக்காமல் இருக்க வேண்டும்.
மேல் கூறிய அனைத்து தலை வலியும் வெயில் காலத்தில் வரக்கூடிய தலை வலியாகும். இது 2 அல்லது 3 நாட்களில் சரி ஆகி விடும். மேல் கூறிய அனைத்து தலைவலிக்கும் மஞ்சள் தூளும், கல் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் போதுமானது. ஒரு வேலை சரி ஆகவில்லை என்றால் அடுத்து கட்டமாக மருத்துவரை அணுகி என்ன தீர்வு என்று கண்டுகொள்ள வேண்டும். இதற்காக மாத்திரையை எடுத்து கொண்டோமானால் அது நமது உடலில் வேறு ஏதேனும் தீங்கு விளைவித்துவிடும்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…