இரவு உணவு லேட்டா சாப்பிடுறீங்களா?அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!

Published by
K Palaniammal

Late night food dangerous -இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி இங்கே காணலாம்.

நவீன வாழ்க்கை முறை மற்றும் இரவு நேர வேலை போன்ற காரணங்களால் இரவு நேரம் கடந்து சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தினாலும் பலரும் அதைப் பின்பற்றுவதில்லை.

அது சற்று ஒரு படி மேல் சென்று தற்போது நகரங்களில் மிட் நைட் உணவு என்ற பெயரில் நடுராத்திரியிலும் உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள் இதனால் பல ஆபத்தான நோய்களும் வருவது அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளம் வயதில் மாரடைப்பு உண்டாகிறது.

நம் உணவிற்கும் நேரத்திற்கும் உள்ள தொடர்பு:

நம் தினசரி வேலைகளை செய்வது கடிகாரத்தை பார்த்து தான். அதுபோல்தான் நம் உடலுக்குள்ளும் கடிகாரம் உள்ளது. நம் மூளையில் உள்ள ஹைபோதெலமஸ் பகுதியில் அமைந்துள்ளது. இதை சிர்கேடியன்  ரிதம் என கூறுவார்கள் இது சூரிய ஒளியை அடிப்படையாக வைத்து வேலை செய்கிறது.

காலையில் நாம் எப்போது எந்திரிக்க வேண்டும் என்றும்  ,எப்போது சாப்பிட வேண்டும் என்றும், எப்போது தூங்க வேண்டும் என்பது வரை உடலில் ஒவ்வொரு செயல்பாட்டிற்குமே நேரத்தை ஒதுக்கி வைக்கிறது .ஆனால் இதன் நேரத்தை நாம் மாற்றி அமைக்கும் போது தான் பல விளைவுகளை சந்திக்கின்றோம்.

இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகள்:

செரிமான பிரச்சனை ;

செரிமான தொந்தரவிற்கு முதல் காரணம் தாமதமாக உணவு எடுத்துக் கொள்வது தான் ஏனென்றால் மெட்டபாலிசம் செயல்பாட்டை ஒழுங்காக வேலை செய்ய  சிர்கேடியன்  ரிதம் உதவி செய்கிறது. இந்த மெட்டபாலிசத்தின் செயல்பாடு பகலில் அதிகமாகவும்  இரவில் குறைவாகவும் இருக்கும் .

இதனால் ஜீரண சக்தியும் குறைவாக இருக்கும். இதன் காரணமாக நெஞ்செரிச்சல், அல்சர் ,அமில எதுக்களிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அல்சர் பிரச்சனை உள்ளவர்களில் எண்பது சதவீதம் பேர் இரவு உணவு தாமதமாக எடுத்து கொள்பவர்கள் தான்.

சர்க்கரை நோய்;

கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் இரவில் குறைவாக சுரக்கும். ஆனால் லேட்டாக உணவு எடுத்துக் கொள்ளும் போது இரவிலும் அது தூண்டப்பட்டு கணையம்  ஓய்வு இல்லாமல் வேலை செய்யும்போது பீட்டா செல்கள் சேதம் அடைகிறது. இதனால் டைப் 2 சர்க்கரை நோய் வரவும் காரணமாகிறது.

உடல் பருமன்;

இரவில் கலோரி நிறைந்த உணவுகளை அதுவும் லேட்டாக எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை கணிசமாக அதிகரிக்கிறது. மேலும் அந்த கலோரிகள் எரிக்கப்படுவதற்கு முன்பே படுக்கச் சென்று விடுவோம், இதனால் அது கொழுப்பாக மாறி அடிவயிற்றில் தொப்பையாக காட்சியளிக்கிறது. இதனால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து பிற்காலத்தில் மாரடைப்பு வரவும் வழி வகிக்கிறது.

தூக்கமின்மை;

தூக்கமின்மை வர பல காரணங்கள் இருந்தாலும் இரவு உணவு லேட்டாக சாப்பிடுவதும் ஒரு காரணமாக உள்ளது. இதன் காரணமாக பகலில் மனச்சோர்வு ,சோம்பல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

எனவே இது போன்ற  வாழ்வியல் சார்ந்த தொந்தரவு வராமல் இருக்க வேண்டும் என்றால் இரவில் ஏழு – எட்டு மணிக்குள் உணவு எடுத்துக் கொள்வது நல்லது.

Recent Posts

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

2 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

2 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

3 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

14 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

14 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

16 hours ago