தற்போது உள்ள சூழ்நிலைகளில் தீங்கு விளைவிக்காத உணவுகள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் உள்ளது, ஆனால் உணவுகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இந்த உணவை எந்த பாத்திரத்தில் சமைக்கிறோம் என்பது மிக முக்கியம். எந்தெந்த பாத்திரத்தில் சமைத்தால் என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படும் என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
நம் எந்த பாத்திரத்தில் சமைக்கின்றோமோ அதன் உலோகங்கள் அந்த உணவுகளில் கலைக்கிறது அது நம் உடலுக்கு சில பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது ,நல்ல பலனையும் கொடுக்கிறது.
நான்ஸ்டிக் பாத்திரம்
சமைப்பதற்கு மிக எளிதாகவும் ,விரைவில் சமையலை முடிக்கவும், உணவுகள் பாத்திரத்தில் ஒட்டாமலும் வரும். ஆனால் அதில் உள்ள டப்லான் கோட்டிங் மற்றும்PTFE,PFOA என்ற ரசாயனம் உள்ளது. இதனால் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. PFOA ரசாயனம் விலங்குகளின் கேன்சரை உருவாகும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதனால் இது மனிதர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறுகிறார்கள். ஒருவேளை இதை பயன்படுத்தினால் நெருப்பை குறைவாகவும், மரத்தாலான கரண்டிகளையும் உபயோகிப்பது நல்லது. கீறல் விழுந்த பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
அலுமினியம்
விலை குறைவானது, விரைவில் சூடாகக் கூடியது. ஆனால் இதில் கலக்கப்படும் சிறிதளவு அலுமினியம் லீச்சிங் ஆப் அலுமினியம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக எலுமிச்சை, தக்காளி, புளிக்குழம்பு போன்றவற்றை செய்தால் அதிகப்படியான அலுமினியம் கலக்கப்படுகிறது இதனால் எலும்பு தேய்மானம், கை கால் வலி ,கல்லீரல் பிரச்சனை, அல்சைமர் ,தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
எவர்சில்வர்
இந்த எவர்சில்வர் அயன் ,கார்பன், குரோமியம், நிக்கல் போன்ற உலோக கலவையால் தயாரிக்கப்படுகிறது. இதனால் நம் உடலுக்கு நன்மையும் இல்லை தீமையும் இல்லை.
இரும்பு பாத்திரம்
இரும்பு பாத்திரத்தில் சிறிதளவு இரும்பு உணவில் கலக்கப்படுகிறது இது நம் உடலுக்கு நன்மை தான். ரத்த சோகை வராமல் தடுக்கிறது. தலஷிமியா போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்கள் இரும்பு பாத்திரத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். துருப்பிடித்த பாத்திரங்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மண் பாத்திரம்
நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண் பாத்திரம் தான் நம் உடலுக்கு எந்த தீங்கும் விளைவைப்பதில்லை. இதில் நன்மை மட்டுமே கொடுக்கக்கூடியது. வெப்பத்தை சமநிலையாக கடத்தக்கூடியது. உணவில் உள்ள சத்துக்கள் வீணாகாமல் வைத்துக்கொள்ளும். அது மட்டுமல்லாமல் மண்ணால் செய்யப்படுவதால் மண்ணில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் நம் உடலில் அன்றாட தாது பற்றாக்குறையை பூர்த்தி செய்யும். எனவே மண் பாத்திரத்தில் சமைப்பதே சிறந்தது.
ஆகவே இதில் எந்த பாத்திரத்தை பயன்படுத்தினால் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…