தினமும் நீங்கள் இந்த பாத்திரத்திலையா சமைக்கிறீங்க..,? அப்போ கண்டிப்பா இந்த பதிவை படிங்க ..!

தற்போது உள்ள சூழ்நிலைகளில் தீங்கு விளைவிக்காத உணவுகள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் உள்ளது, ஆனால் உணவுகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இந்த உணவை எந்த பாத்திரத்தில் சமைக்கிறோம் என்பது மிக முக்கியம். எந்தெந்த பாத்திரத்தில் சமைத்தால் என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படும் என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

நம் எந்த பாத்திரத்தில் சமைக்கின்றோமோ அதன் உலோகங்கள் அந்த உணவுகளில் கலைக்கிறது அது நம் உடலுக்கு சில பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது ,நல்ல பலனையும் கொடுக்கிறது.

நான்ஸ்டிக் பாத்திரம்

சமைப்பதற்கு மிக எளிதாகவும் ,விரைவில் சமையலை முடிக்கவும், உணவுகள் பாத்திரத்தில் ஒட்டாமலும் வரும். ஆனால் அதில் உள்ள டப்லான் கோட்டிங் மற்றும்PTFE,PFOA  என்ற ரசாயனம் உள்ளது. இதனால் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. PFOA ரசாயனம் விலங்குகளின் கேன்சரை உருவாகும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதனால் இது மனிதர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறுகிறார்கள். ஒருவேளை இதை பயன்படுத்தினால் நெருப்பை குறைவாகவும், மரத்தாலான கரண்டிகளையும் உபயோகிப்பது நல்லது. கீறல் விழுந்த பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

அலுமினியம்

விலை குறைவானது, விரைவில் சூடாகக் கூடியது. ஆனால் இதில் கலக்கப்படும் சிறிதளவு அலுமினியம் லீச்சிங் ஆப் அலுமினியம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக எலுமிச்சை, தக்காளி, புளிக்குழம்பு போன்றவற்றை செய்தால் அதிகப்படியான அலுமினியம் கலக்கப்படுகிறது  இதனால் எலும்பு தேய்மானம், கை கால் வலி ,கல்லீரல் பிரச்சனை, அல்சைமர் ,தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

எவர்சில்வர்

இந்த எவர்சில்வர் அயன் ,கார்பன், குரோமியம், நிக்கல் போன்ற உலோக கலவையால் தயாரிக்கப்படுகிறது. இதனால் நம் உடலுக்கு நன்மையும் இல்லை தீமையும் இல்லை.

இரும்பு பாத்திரம்

இரும்பு பாத்திரத்தில் சிறிதளவு இரும்பு உணவில் கலக்கப்படுகிறது இது நம் உடலுக்கு நன்மை தான். ரத்த சோகை வராமல் தடுக்கிறது. தலஷிமியா  போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்கள் இரும்பு பாத்திரத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். துருப்பிடித்த பாத்திரங்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மண் பாத்திரம்

நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண் பாத்திரம் தான் நம் உடலுக்கு எந்த தீங்கும் விளைவைப்பதில்லை. இதில் நன்மை மட்டுமே கொடுக்கக்கூடியது.  வெப்பத்தை சமநிலையாக கடத்தக்கூடியது. உணவில் உள்ள சத்துக்கள் வீணாகாமல் வைத்துக்கொள்ளும். அது மட்டுமல்லாமல் மண்ணால் செய்யப்படுவதால் மண்ணில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் நம் உடலில் அன்றாட தாது பற்றாக்குறையை பூர்த்தி செய்யும். எனவே மண் பாத்திரத்தில் சமைப்பதே சிறந்தது.

ஆகவே இதில் எந்த பாத்திரத்தை பயன்படுத்தினால் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
rain pradeep john
africa cyclone
anil kumble ashwin
l murugan
chennai rains
Mumbai Boat Accident