எப்பவுமே நீங்க மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா ?அப்போ இந்த உணவுகளை எடுத்துக்கோங்க..!

Published by
K Palaniammal

Happy hormone– நம் மூளையில் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க கூடிய உணவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

செரோடோனின் ,டோபமைன் ;

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நாம் சாப்பிடும் உணவும் ஒரு காரணமாய் இருக்கிறது. அதுவே மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் அதற்கும் உணவு தான் காரணம். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது மூளையில் செரட்டோனின் என்ற ஹார்மோனும்  டோபமைன் என்ற ரசாயனமும் சுரக்கும் ,இதை ஹாப்பி ஹார்மோன் என்று கூறுவார்கள். இதை நாம் உணவின் மூலமாகவும் சுரக்கச் செய்யலாம்.

நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் உற்சாகமாக இருப்பதற்கும் இந்த டோபோமைன் மற்றும் செரட்டோனின்  தான் காரணமாய் இருக்கிறது .பொதுவாகவே நம் மனதிற்கும் உடம்பிற்கும் நிறைய கனெக்சன் உள்ளது .

அதாவது நாம் சந்தோஷமாக இருக்கும்போது இந்த டோபமைன் அதிகமாக சுரக்கும். டோபமைன்  அதிகமாக சுரக்கும் போதும் நாம் மகிழ்ச்சியாக இருப்போம். இந்த டோபமைனை மருந்துகளாக மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். ஆனால் நம் உணவின் மூலமும் சுரக்கச் செய்யலாம்.

மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்க தேவையான சத்துக்கள்;

ட்ரொப்டோபான் , வைட்டமின் சி ,விட்டமின் பி12, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், காப்பர் ,செலினியம் போன்ற சத்துக்கள் தேவைப்படுகிறது.

உணவு வகைகள் ;

மீன்;

மீனில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. குறிப்பாக சாலமீன் அதாவது மத்தி மீன் அயில மீன், நெத்திலி மீன் சூரை மீன் ,சாலமன் போன்ற மீன்களை எடுத்துக் கொள்வதன், மூலம் டோபமைன் நமது மூளையில் சுரக்கும்.

முட்டை;

முட்டையில் புரதம் அதிகம் உள்ளது .அதேபோல் தைரோசின் என்ற அமினோ ஆசிட்டும் உள்ளது. இதை நம் உடலானது டோபோமைனாக மாற்றுகிறது.

நட்ஸ் மற்றும் விதை உணவுகள்;

பாதாம், முந்திரி, வேர்க்கடலை ,பூசணி விதை போன்றவற்றிலும் தைரோசின் உள்ளது.

டார்க் சாக்லேட்;

டார்க் சாக்லேட்டில் 70 சதவீதத்திற்கு மேல் கோக்கோ சேர்க்கப்பட்டுள்ளதா என பார்த்து வாங்குங்கள். ஏனெனில் அது  டோபோமைன் உருவாக்க உதவி செய்கிறது என ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த டார்க்  சாக்லேட் ஹார்ட் அட்டாக் வருவதையும் தடுக்கிறது.

தயிர்;

தயிரில் இல்லாத சத்துக்களே  இல்லை எனலாம். குறிப்பாக ப்ரோ பயோடிக் அதிகம் உள்ளது. நம் வயிற்றில் ஏதேனும் பிரச்சனை என்றால் அது தலைவலியை ஏற்படுத்தும் ஆனால் தயிரானது நமது வயிற்றுப் பகுதிக்கு மிக நல்லது. தயிரும் டோபமைன் உற்பத்திக்கு உதவி செய்கிறது .

எனவே இந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டு எப்போதுமே மகிழ்ச்சியாக இருங்கள்.

Recent Posts

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…

19 seconds ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : ரோஹித் தலைமையில் இந்திய அணி…பிசிசிஐ அறிவிப்பு!

மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி  கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…

13 minutes ago

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு : சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…

29 minutes ago

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ‘இவர்’ தான்! அடித்து கூறும் நெட்டிசன்கள்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…

39 minutes ago

களைகட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! களத்திற்கு தயாரான திமுக vs நாதக!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனுக்கள்…

1 hour ago

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு? த.வெ.க பொருளாளர் சொல்வேதென்ன?

காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…

1 hour ago