மக்களே.! 8 மணி நேர தூக்கம் சிறந்தது என்று நினைக்கிறீர்களா.?
மக்களே….பொதுவாக தூக்கம் என்றாலே அனைவருக்கும் பொதுவானதும் பிடித்தமானாது என்றும் கூட சொல்லலாம். அந்த வகையில், சிலர் வெளையாட்டு மற்றும் அதிக வேலை காரணமாக சோர்வு நிலையை கலைப்பதற்கு தூங்குவர்.
இங்கு பெரும்பாலோர் முழு இரவு நேர தூக்கம் என்பது பெரியவர்களுக்கு எட்டு மணிநேரம். ஆனால், இளமை யானவர்களுக்கு 7 மணி நேரம் என்று சொல்லபடுகிறது.
இந்நிலையில், இது குறித்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவில் உள்ள ஃபுடான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இளமை வயது மற்றும் வயதானவர்களுக்கு ஏழு மணிநேர தூக்கமே சிறந்ததாக இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனராம்.
அதன்படி, நேச்சர் ஏஜிங் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், நல்ல மன ஆரோக்கியத்திற்கு ஏழு மணிநேர தூக்கம் சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அந்த வகையில், அதன் ஆய்வில் 38 முதல் 73 வயதுக்குட்பட்ட 5,00,000 பங்கேற்பாளர்களிடம் ஆராய்ச்சி மேற்கொண்டபோது ஆய்வில் பங்கேற்பாளர்கள் தங்கள் தூக்க முறைகளைப் புகாரளித்தனர் மற்றும் அவர்களின் மன ஆரோக்கியம் பற்றிய கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
குறிப்பாக வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் நல்ல இரவு தூக்கம் பெறுவது முக்கியம் என்று கூறுகின்றனர் ஆனால், அது வயதை பொறுத்து மாறுபடும் என்று கூறப்படுகிறது.