காலையில் எழுந்தவுடன் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நினைக்காதீர்கள்! இதை மட்டும் தான் சாப்பிட வேண்டும்!
நாம் தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் முதல் முதலில் அருந்துவது தேநீர் தான். ஏனென்றால், இதனை குடித்தால் தான் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், நாம் காலையில் எழுந்தவுடன் எதையெல்லாம் உண்ண வேண்டும், எதை உண்டால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
தற்போது இந்த பதிவில், காலையில் எழுந்தவுடன் எதை உண்ண வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
இளஞ்சூடான நீர்
காலையில் எழுந்தவுடன் இளஞ்சூடான நீரை அருந்துவது நல்லது. இவ்வாறு அருந்துவதால் உடல் எடை குறைவதுடன், உடலில் உள்ள கழிவுகளும் வெளியேற்றப்பட்டு, செரிமானத்தை சீராக்குகிறது.
வெந்தயநீர்
காலையில் எழுந்தவுடன் வெந்தய நீர் அல்லது சீரக நீரை வெறும் வயிற்றில் குடித்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும், சீராக தண்ணீர் அஜீரண கோளாறுகளை நீக்கி, உடலை குளிர்ச்சியாக்குகிறது.
தேன்
தினமும் காலையில் இளஞ்சூடான நீரில் தேன் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால், சளி மற்றும் இருமலை போக்குகிறது. இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
மேலும், இது செரிமான பிரச்சனையை போக்கி, உடல் எடை அதிகரிப்பை தடுத்து, உடல் எடையை குறைகிறது.
காய்கறிகள்
காலையில் எழுந்தவுடன், கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்ற காய்கறிகளை பச்சையாக உண்பது மிகவும் நல்லது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை குறைத்து, உடலில் தேவையற்ற கொழுப்பை வெளியேற்றி சருமத்தை பளபளப்பாக்குகிறது.