அடடா…! இந்த கீரையை பற்றி இவ்வளவு நாளா தெரியாம போச்சே….!!!

Default Image

பல மருத்துவ குணங்களை கொண்டுள்ள புளிச்சகீரையானது, பொதுவாக இந்திய பகுதிகளில் அதிக அளவில் விளையக்கூடிய ஒன்று. பெயருக்கு எர்ரார்ப்போல் புளிப்பு சுவையுள்ள இந்த கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புளிச்சகீரைக்கு காசினிக் கீரை என்ற மற்றோரு பெயரும் உண்டு.

இரத்த அழுத்தம் :

Image result for இரத்த அழுத்தம் :

இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்த இந்தக் கீரையை சாப்பிடுவதால் ரத்தம் தூய்மையாகும். உடல் குளிர்ச்சியாவதுடன் மந்தமும் நீங்கும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது. கல்லீரல் சம்பந்தமான நோய்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.

உடல் வலிமை :

Related image

உடல் வலிமை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கீரையை சிறிதளவேனும் சமைத்து சாப்பிட கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும். இந்த கீரையில் தாதுப்பொருட்களும், இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கலந்துள்ளன.

வாதநோய் :

Image result for வாதநோய் :

வாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புளிச்சக்கீரையை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை சமைத்து சாப்பிட்டுவந்தால் காலப்போக்கில் அவர்களுக்கு வாத நோய் தணிந்து விடும். மலசிக்கல் உள்ளவர்களும் இதேபோல சாப்பிடுவதால் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

இதயநோய் :

Image result for இதயநோய் :

இதய நோய் வரமால் பாதுகாப்பதுடன் சிறுநீரகக் கோளாறுகளை குணப்படுத்தக்கூடிய தன்மை இந்த கீரைக்கு உண்டு. சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

காசநோய் :

Related image

 

உடல் வெப்பத்தை குறைத்து சமப்படுத்துவதில் புளிச்ச கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு. காசநோய் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தும் தன்மை இந்த கீரைக்கு இருப்பதால், இந்த கீரையை உடலையும், குடலையும் குணமாக்கும் கீரை என்கின்றனர்.

புளிச்ச கீரையின் கனிகளின் சாறுடன் சர்க்கரை மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட மலசிக்கல் குணமாகும். இந்த கீரை பித்தத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையது என்பதால் பித்தம் அதிகமாக உள்ளவர்கள் இந்த கீரையை தவிர்ப்பது நல்லது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்