அடடா… இவ்வளவு நாளா தெரியாம போச்சே…!! பூண்டு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையுமா…?

Default Image

பூண்டு நம் அனைவரும் அறிந்த ஒரு பொருள் தான். இது நமது சமையல் அறைகளில் அதிகமாக பயன்படுத்தப்படக்கூடிய ஒன்று. இதில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.

குணமாகும் நோய்கள் :

Image result for பூண்டு

பூண்டு சிறுகட்டியால், காத்து மந்தம், நாள்பட்ட இருமல், இரைப்பு, வயிற்றுப புழுக்கள், வாத நோய்கள், வாயு தொல்லைகள், தலைவலி, ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது. பூண்டை நசுக்கி அதன் சாற்றை 2 துளி அளவு ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் 3 நாள்கள் வரை காதில் விட்டு வந்தால் காதுவலி குணமாகும்.

வயிறு உப்பிசம் :

Image result for வயிறு உப்பிசம்

பூண்டு, மிளகு கரிசாலை இலைகள் இந்த மூன்றையும் சம அளவு எடுத்துக் கொண்ட அரைத்து பசையாக்கி எலுமிச்சம் பழ அளவு ஒருவேளை உணவுக்கு பின்னர் சாப்பிட்டால் வயிறு உப்பிசம் சரியாகும்.

இரத்த அழுத்தம் :

Image result for இரத்த அழுத்தம் :

50 கிராம் உரித்த பூண்டை நசுக்கி 1 லிட்டர் தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி வடிகட்டி வைத்து கொண்டு அந்த எண்ணெயை வலி உள்ள இடத்தில தேய்த்து வர வாதநோய்கள் குணமாகும். பூண்டு சாற்றை 10 துளிகள் அளவு இரவு உணவுக்கு பின்னர் சாப்பிட வயிற்று புழுக்கை வெளியாகும். பூண்டு எண்ணெய் கக்குவான், குடல் புண், மலேரியா, யானைக்கால், ஆஸ்துமா ஆகியவற்றை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. மேலும் இது இரத்த அழுத்த நோயையும் குணமாக்கும்.

கொழுப்பை கரைக்க :

Image result for கொழுப்பை கரைக்க :

மேலும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் சி மற்றும் பி உள்ளது. பூண்டின் மணத்திற்கு காரணம் அதில் உள்ள சல்பர் ஆகும். பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல் குழாய் மற்றும் சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். பால், பூண்டு, தேன் கலவையை தினமும் பருகி வந்தால் வயிற்று கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்