கோடைக்கு கூலா இருக்கணும்னு எல்லாத்தையும் குடிச்சீராதீங்க, அப்படி குடிச்ச என்ன ஆகும் தெரியுமா?

Default Image
  • செயற்கை பானத்தில்உள்ள தீமைகளும், அதனால் நமது உடலுக்கு ஏற்படும் தீங்குகளும்.

கோடைகாலம் வந்தாலே பலருக்கு பயம் வந்து விடுகிறது. ஏனென்றால், எந்த நேரத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும் என்று சொல்ல முடியாது. இக்காலங்களில் வரும் அனைத்து நோய்களுக்கும் உடல் வெப்பம் தான் காரணம்.

Image result for சோடா

இந்த வெப்பத்தை தணிப்பதற்கு நாம் எத்தனையோ வழிகளை மேற்கொள்வதுண்டு. நாம் உடல் வெப்பத்தை தணிப்பதற்காக பல குளிர்பானங்களை குடிப்பதுண்டு. நம்மில் அதிகமானோர் வேலை செய்வதற்காக வெளியில் செல்லும் போது, கடைகளில் நாம் சோடா, பெப்சி, கொக்ககோலா என பல வகையான வெளிநாட்டு பானங்களை குடிப்பது உண்டு.

சர்க்கரை நோய்

Image result for சர்க்கரை நோய்

செயற்கை பானங்களை நாம் விரும்பி அருந்துகிறோம். ஆனால், இந்த பானங்களில் செயற்கை சர்க்கரையான அஸ்பார்டேம் சேர்க்கப்படுகிறது.  இதனால் வலிப்பு, மூளையில் கட்டி, ஹைப்பர்ஆக்டிவ் பிரச்னைகள், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

புற்று நோய்

சோடாவில் உள்ள பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை இரண்டும் இணைந்து பல்லின் எனாமலைப் பாதிக்கின்றன. கணையப் புற்றுநோய் வருவதற்கும், பேஃட்டி லிவர் உள்ளிட்ட கல்லீரல் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

Related image

காஃபின் அதிகமான பானங்களை அருந்தும்போது மார்பகப் புற்றுநோய் முதலான சில புற்றுநோய்கள், சீரற்ற இதயச் செயல்பாடு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

செரிமான பிரச்சனையை உண்டாக்கும் செயற்கை பானம்

Image result for செரிமான பிரச்சனை

செயற்கை குளிர்பானங்களில் இருக்கும் அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலங்களோடு கலக்கும்போது, இரண்டும் வினைபுரிந்து இரைப்பையைப் பாதிக்கின்றன. செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

சோடாவில் உள்ள தீமைகள்

நம்மில் அதிகமானோர் சோடாவை விரும்பி குடிப்பதுண்டு. ஆனால், இந்த பாணங்களால் நமக்கு ஏற்படும் தீமைகள் பற்றி நாம் அறிந்துகொள்வதில்லை.

Image result for சோடா

நாம் அருந்தும், ஒரு பாட்டில் சோடாவில் 10 டீஸ்பூன் அளவுக்கு சர்க்கரை இருக்கிறது. கார்போனேட்டட்  பானங்களைக் கர்ப்பிணிகள் அருந்தினால், அதில் உள்ள நச்சுக்கள் காரணமாகக் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

மொத்தத்தில் எந்த விதத்திலும் ஒரு சதவிகிதம்கூட உடலுக்கு நன்மையைத் தராத உணவுதான் செயற்கை குளிர்பானங்கள்.

எலும்பு சம்பந்தமான நோய்கள்

Related image

நாம் அருந்தும் சோடாவில், பாஸ்பாரிக் அமிலம் கார்போனேட்டட் குளிர்பானங்களில் அதிக அளவு இருக்கிறது. இது, உடலில் கால்சியம் கிரகிக்கப்படுவதைத் தடுக்கிறது.  இதன் காரணமாக, ஆஸ்டியோபொரோசிஸ் முதலான எலும்பு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

இனிமேல் குடிக்காதீங்க

இந்த பானங்களை நாம் அருந்துவதால், நமது உடல் ஆரோக்கியத்திற்கும், உயிருக்கும் உலை வைக்கும் பல நோய்களை ஏற்படுத்தக் கூடிய, தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் இந்த பானங்களில் உள்ளது.

Image result for செயற்கை பானம் vs இயற்கை பானம்

 

எனவே நாம் செயற்கையான குளிர்பானங்களை குடிப்பதை விட்டு விட்டு, இயற்கையான பானங்களை அருந்துவோம். அது நமக்கு உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

school - chennai imd
Amaran - Tamil Nadu BJP
queen elizabeth wedding
Kanguva
tn govt
09.11.2024 Power Cut Details
Ramya Pandian Wedding