வியர்வை நாற்றம் தாங்க முடியலையா ?அப்போ இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க..!
Sweating-கோடை காலத்தில் ஏற்படும் அதிக வியர்வையை கட்டுப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
பலரும் வேர்வை துர்நாற்றத்தால் மன உளைச்சலுக்கு சென்று விடுகின்றனர். அதுவும் வெயில் காலத்தில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படும்.
அதிக வியர்வை சுரக்க காரணங்கள்:
கோடை காலங்களிலும், அதிக வேலை செய்வதன் மூலமும் உடல் தசைகள் சூடேறும் அதனால் அதிக வியர்வை சுரக்கிறது. வியர்க்கும் போது உடலில் உள்ள உப்பு சத்தும் வெளியேறுகிறது. மேலும் பயம் , பதட்டம் மற்றும் ஏதேனும் நோயின் முன் அறிகுறியின் காரணமாக கூட அதிக வியர்வை வரும் .
வியர்வை சுரப்பிகளில் எக்ரைன் ,அபோக்ரைன் என உள்ளது. இதில் எக்ரைன் வியர்வை சுரப்பி நம் பிறந்ததிலிருந்து இருக்கும். இது முகம், கை ,கால் பகுதிகளில்சுரக்கும் . இது நேரடியாக தோலின் மூலம் வியர்வை வெளியேற்றும் .
அபோகிரைன் சுரப்பி ரோமம் உள்ள பகுதிகளான அக்குள், பிறப்புறுப்பு மற்றும் மார்பு பகுதிகளில் சுரக்கும் .இது முடியின் வேர்க்கால் பகுதியில் சுரந்து முடியின் வழியாக வியர்வை வெளியேற்றும் போது ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த சுரப்பி ஆண், பெண்கள் பருவநிலையை அடைந்த பிறகு சுரக்கிறது .
அதிக வியர்வையை தடுக்கும் வழிமுறைகள்:
காரமான உணவுகளையும் ,அதிக சூடான உணவுகளையும் தவிர்ப்பது அதிக வியர்வை சுரக்காமல் இருக்கும் .
இறுக்கமான ஆடைகளை அணியாமல், காற்றோட்டம் உள்ள பருத்தி ஆடைகளை அணியலாம் .பிறப்புறுப்பு மற்றும் அக்குள் பகுதிகளில் உள்ள ரோமங்களை மாதத்திற்கு இரண்டு முறையாவது அகற்ற வேண்டும்.
காலை நேரத்தில் அதிகமாக நீர் ஆகாரம், பழைய சாதம் கஞ்சி, திராட்சை போன்ற பழங்களை எடுத்துக் கொண்டால் அந்த நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.
அதிக வியர்வையை கட்டுப்படுத்த வீட்டு குறிப்புகள்:
அக்குள் பகுதியில் கற்றாழை ஜெல்லை இரவில் தடவி வரவும். சந்தனத்தை தண்ணீரில் கலந்து அக்குள் பகுதியில் தடவவும் .மேலும் மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து அக்குள் பகுதியில் தடவி வந்தால் அது பாக்டீரியாக்களை அழித்து வியர்வை ஏற்பட்டாலும் அதில் துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.
இவற்றை இரவில் செய்து காலையில் குளித்து வர நாளடைவில் அதிக வியர்வை கட்டுக்குள் வரும் .மேலும் தினமும் குளிக்கும் போது சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து குளித்து வந்தால் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.
ரசாயனம் கலந்த சென்ட் , நறுமணமூட்டப்பட்ட சோப்புகள் போன்றவற்றை பயன்படுத்துவதை விட நம் எளிமையான முறையில் வீட்டு குறிப்புகளை பயன்படுத்தி அதிக வியர்வையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.