செவ்வாழை பழம் சாப்பிட்டால் இந்த நோய்கள் வராமல் தடுக்கலாமா.?
தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் :
செவ்வாழை பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.இதில் நார்சத்துக்களும் பொட்டாசியம் ,வைட்டமின் எ ,புரதம் ,ஆண்டிஆக்சிடன்ட் போன்ற பல சத்துக்களும் நிறைந்துள்ளன.ஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
வாழை பழ வகைகளை காட்டிலும் செவ்வாழை பழத்தில் பல சத்துக்கள் நிரம்பியுள்ளன.இந்த வகையில் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு காணலாம்.
- தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் சீராவதுடன் ,சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
- ஒரு செவ்வாழை பழத்தில் தினமும் நமக்கு தேவையான 16% வைட்டமின் சி நிறைந்துள்ளது.
- தினமும் ஒரு செவ்வாழை பழத்தை உண்டால் இரத்த சோகை ,இரத்த குறைபாடு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
- செவ்வாழை பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சிடண்ட்ஸ் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதனால் இதனை தினமும் உண்டால் இளமையான மற்றும் மின்னும் சருமம் கிடைக்கும்.
- இந்த பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் கண் பார்வை கோளாறு ஏற்படாமல் தடுத்து கண் பார்வை திறனை அதிகரிக்கும்.