தைராயிடு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறணுமா ? அப்ப இதெல்லாம் நீங்க கண்டிப்பா செய்யணும்

Default Image
  • தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடவேண்டியவை மற்றும் சாப்பிட கூடாதவை.

இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தைராயிடு உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல பிரச்சனைகளையும், உடலில் பல ஆரோக்கிய கேடுகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தைராயிடு உள்ளவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும், தைராயிடு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.

அயோடின் உப்பு

Image result for அயோடின் உப்பு

தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் சமையல் செய்யும் போது, உணவில் அயோடின் உப்பு சேர்க்க வேண்டும். ஏனென்றால் தைராயிடு சுரப்பி சீராக வேலை செய்ய வேண்டுமென்றால், அதற்கு அயோடின் சத்து மிகவும் அவசியமான ஒன்று.

தயிர்

Image result for தயிர்

தைராயிடு பிரச்சனை உள்ளவர்கள் தயிர் மற்றும் பால் அதிகமாக குடிக்கலாம். அதிலும் கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் மற்றும் பாலை குடிப்பது நல்லது. ஏனென்றால் அவற்றில் அயோடின் அதிகமாக இருக்கும்.

இறைச்சி

Image result for இறைச்சி

உடலில் தாதுச்சத்துக்கள் குறைவாக இருக்கும் போது, தைராயிடு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்படிப்பட்டவர்கள் தங்களது உணவில் கோழி அல்லது மாட்டிறைச்சியை தங்களது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

முட்டை

Image result for முட்டை

முட்டையில், 16 சதவீதம் அயோடின் சத்தும், 20 சதவீதம் செலினியம் சத்தும் உள்ளது. எனவே தைராயிடு சுரப்பி சீராக இருக்க முட்டை சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஓட்ஸ்

Image result for ஓட்ஸ்

தைராயிடு பிரச்னை உள்ளவர்கள், ஓட்ஸ், பார்லி மற்றும் பிரவுன் அரிசி ஆகியவற்றை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இவற்றில் தாயத்து சுரப்பியை சீராக வைத்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது.

இதை சாப்பிடாதீங்க

பாஸ்ட் புட்

Image result for பாஸ்ட் புட்

நம்மில் அதிகமானோர் மேலை நாட்டு உணவு பொருட்களான பாஸ்ட் புட் உணவு விரும்பி சாப்பிடுவதுண்டு. தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏன்னென்றால் இந்த உணவுகளை சாப்பிடும் போது, தைராக்சின் ஹார்மோனில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

Related image

தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவற்றில் அயொடினின் அளவு மிகக் குறைவாக இருக்கும். மேலும் இவற்றில் சோடியம் கலந்த ரசாயனப்பொருட்கள் அதிகமாக சேர்க்கப்பட்டு இருக்கும். எனவே இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

சோளம்

Image result for சோளம்

தேறாது பிரச்னை உள்ளவர்கள் சோளம், ஆளி வித, சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவரில் அதிகமான சல்பர் சத்துக்கள் இருக்கும். எனவே இவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்