பப்பாளிப் பழத்தை பொறுத்தவரையில் நன்கு கனிந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்ணின் உடலுக்கு ஏற்றது. ஆனால் காய் வெட்டாக உள்ள பழங்களை சாப்பிடுவது தவறு.
பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தங்களது கர்ப்பத்தின் மூன்று மாத காலம் வரை, மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், அந்த மூன்று மாத காலங்களில் நமது உடலில் பல்வேறு பலவீனம் ஏற்படும். இதனால் உணவு விஷயங்களிலும் சரி, மற்ற நடைமுறை விஷயங்களிலும் சரி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக ஒரு பெண் கர்ப்பம் தரித்துவிட்டாலே, அவர்களிடம் முதியவர்கள் பல யோசனைகள் கூறுவது உண்டு. அதில் ஒன்று தான் கர்ப்பகாலத்தில் பப்பாளி பழம் சாப்பிடக் கூடாது எனக் கூறுவது.
பப்பாளிப் பழத்தை பொறுத்தவரையில் நன்கு கனிந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்ணின் உடலுக்கு ஏற்றது. ஆனால் காய் வெட்டாக உள்ள பழங்களை சாப்பிடுவது, கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என சில ஆய்வுகள் கூறுகிறது.
பொதுவாக ஆசிய கண்டத்தில் உள்ள உணவுப் பொருட்கள் சூடு தன்மை கொண்டவை மற்றும் குளிர்ச்சித்தன்மை கொண்டது என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. அதில் மிகவும் சூடு நிறைந்த உணவுகளை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்களும் சரி, முதியவர்களும் சரி அறிவுறுத்துவது உண்டு. சூடு தன்மை வாய்ந்த உணவு குழந்தையை பாதிக்கும் என கூறப்படுவதால் சற்று குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவது கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது எனக் கூறப்படுறது. அந்த வகையில், பப்பாளி பழம் சூடு தன்மை கொண்ட உணவுகளின் பட்டியலில் உள்ளதால், இந்த பழத்தை சாப்பிட வேண்டாம் என கூறுகின்றனர்.
நன்கு கனிந்த பப்பாளிப் பழங்களை கர்ப்பகாலத்தில், சாப்பிடுவதால் பல நல்ல பலன்களை அடையலாம். அதேசமயம் சற்று பிச்சை தன்மையோடு சரியாக கனியாத பழங்களை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்வது தவறு. கனிந்த பப்பாளி பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, கரோட்டின் ஆகிய சத்துக்கள் உள்ளது. இவை அனைத்தும் கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது.
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…