கர்ப்ப காலத்தில் பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா?

Default Image

பப்பாளிப் பழத்தை பொறுத்தவரையில் நன்கு கனிந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்ணின் உடலுக்கு ஏற்றது. ஆனால் காய் வெட்டாக உள்ள பழங்களை சாப்பிடுவது தவறு.

பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தங்களது கர்ப்பத்தின் மூன்று மாத காலம் வரை, மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.  ஏனென்றால், அந்த மூன்று மாத காலங்களில் நமது உடலில் பல்வேறு பலவீனம் ஏற்படும். இதனால் உணவு விஷயங்களிலும் சரி, மற்ற நடைமுறை விஷயங்களிலும் சரி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக ஒரு பெண் கர்ப்பம் தரித்துவிட்டாலே, அவர்களிடம் முதியவர்கள் பல யோசனைகள்  கூறுவது உண்டு.  அதில் ஒன்று தான் கர்ப்பகாலத்தில் பப்பாளி பழம் சாப்பிடக் கூடாது எனக் கூறுவது.

பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஆபத்தா?

பப்பாளிப் பழத்தை பொறுத்தவரையில் நன்கு கனிந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்ணின் உடலுக்கு ஏற்றது. ஆனால் காய் வெட்டாக உள்ள பழங்களை சாப்பிடுவது, கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என சில ஆய்வுகள் கூறுகிறது.

பப்பாளி பழம் சாப்பிட வேண்டாம் என கூற காரணம்?

pappayaகர்ப்பிணி பெண்கள் பப்பாளிப் பழங்களை சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்பதுபழைய நம்பிக்கை ஆகும். மலேசியா இந்தோனேசியா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் பப்பாளி பழங்களை, சில பகுதிகளில் கருக்கலைப்பிற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாகவே இந்தியாவில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் பப்பாளி பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.

பப்பாளி பழம் உடல் சூட்டை அதிகரிக்குமா?

பொதுவாக ஆசிய கண்டத்தில் உள்ள உணவுப் பொருட்கள் சூடு தன்மை கொண்டவை மற்றும் குளிர்ச்சித்தன்மை கொண்டது என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. அதில் மிகவும் சூடு நிறைந்த உணவுகளை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்களும் சரி, முதியவர்களும் சரி அறிவுறுத்துவது உண்டு. சூடு தன்மை வாய்ந்த உணவு குழந்தையை பாதிக்கும் என கூறப்படுவதால் சற்று குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவது கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது எனக் கூறப்படுறது. அந்த வகையில், பப்பாளி பழம் சூடு தன்மை கொண்ட உணவுகளின் பட்டியலில் உள்ளதால், இந்த பழத்தை சாப்பிட வேண்டாம் என கூறுகின்றனர்.

பப்பாளி பழத்தின் பயன்கள்

நன்கு கனிந்த பப்பாளிப் பழங்களை கர்ப்பகாலத்தில், சாப்பிடுவதால் பல நல்ல பலன்களை அடையலாம். அதேசமயம் சற்று பிச்சை தன்மையோடு சரியாக கனியாத பழங்களை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்வது தவறு. கனிந்த பப்பாளி பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, கரோட்டின் ஆகிய சத்துக்கள் உள்ளது. இவை அனைத்தும் கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது.

Papayaபப்பாளி பழங்களை நாம் சாப்பிடும் போது செரிமானம் சிறப்படைந்து, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் பப்பாளி பழங்களை சாப்பிடுவதால் சருமம் பொலிவு பெறுவதோடு, முகத்தில் ஏற்படும் புண்கள் கொப்புளங்கள் போன்றவற்றை தடுத்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்