காளான் சூப் குடிப்பதால் கருப்பை நோய் குணமாகுமா….?
இன்றைய நாகரீகமான உலகில் நமது முன்னோர்களின் பாரம்பரிய இற்கையான உணவு முறைகளை மறந்து, மேலை உணவு முறைகளை பின்பற்றுகிறோம். இதனால் நமக்கு எந்த விதத்திலும் நன்மை ஏற்படுவதில்லை. அதிகப்படியான தீமைகள் தான் ஏற்படுகிறது.
காளான் நாம் அனைவரும் அறிந்த ஒரு உணவு வகை தான். இதில் இரண்டுவகை காளான்கள் உள்ளது. உணபதுக்கேற்ற காளான், நச்சு தன்மை உள்ள காளான். உண்பதற்கேற்ற காளானை தவிர்த்து, நச்சு தன்மையுள்ள காளான்களை உண்டால் உயிரை இழக்கக் கூடிய நிலை கூட ஏற்படலாம்.
இரத்தம்
காளானில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. காளான் இரத்தத்தை சுத்தம் செய்து இதயத்தை காக்கிறது.
மாரடைப்பு :
காளானை நமது உணவில் சேர்த்து வரும் போது, இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பை வரவிடாமல் தடுத்து, மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
புற்றுநோய்
இன்று உயிருக்கு உலை வைக்கும் உயிர்கொல்லி நோயாக கருதப்படுவது புற்றுநோய். இந்த நோயை வர விடாமல் தடுக்க கூடிய ஆற்றல் காளானில் உள்ளது. இது உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை கொடுத்து புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.
குழந்தைகள் நலன்
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள் காளானில் நிறைந்துள்ளன. இதிலுள்ள தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கருப்பை
இன்று அதிகமான பெண்கள் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று கருப்பை பிரச்சனைகள். இந்த பிரச்சனைகள் நீடிக்கும் பட்சத்தில் உயிழப்பையும் ஏற்படுத்தும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காளான் சூப் அருந்துவதால், பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
ஜீரணம்
உணவு செரிமானமாவதில் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து காளான் சுப குடித்து வந்தால், எளிதில் ஜீரணமாவதோடு, மலசிக்கல் பிரச்சனைகளையும் நீக்க வல்லது. மேலும் காளான் மூட்டு வாதம் உள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணி ஆகும்.