உடலை பக்குவமாக பாதுகாக்கும் பாகற்காய்….!!!
நமது அன்றாட வழியில், நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. அனைத்து காய்கறிகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒன்று தான்.
தற்போது நாம் இந்த பதிவில் பாகற்காயின் மருத்துவகுணங்கள் பற்றி பார்க்கலாம். இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுவது மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாகற்காய் ஒரு சிறந்த உணவாக பயன்படுகிறது. இவர்கள் அடிக்கடி தங்களது உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால், இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
இவ்வாறு செய்து வரும் போது சர்க்கரையின் அளவு குறைந்து, இதிலிருந்து விடுதலை பெறலாம்.
நோய் எதிர்ப்பு ஆற்றல்
பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. பாகற்காயில் ப்ரோடின் மற்றும் வைட்டமின் சத்துகள் அதிகமாக உள்ளது. தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும்.
வயிற்றுப்பூச்சி
பாகற்காயை நமது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும் போது, நமது வயிற்றில், குடல்களில் மற்றும் இரைப்பையில் உள்ள பூச்சிகளை அளித்து, கிருமிகள் மற்றும் நச்சுக்களால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
தாய்ப்பால்
குழந்தை பெற்ற தாய்மார்களின் உடல் நலத்திற்கும், குழந்தைகளுக்கும் பாகற்காய் ஒரு நல்ல மருந்து. பாக்றயை குழந்தை பெற்ற தாய்மார்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, தாய் சுரப்பதற்கு இது உதவி புரிகிறது.
இரத்த கொதிப்பு
பாகற்காயை நமது உணவில் நாம் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும் போது, இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இந்த காயை நமது உணவில் சேர்த்து கொள்ளும் போது ஏற்கத்தக்க கொதிப்பு போன்ற நோய்களை குணப்படுத்தலாம்.
சரும பிரச்னை
பாகற்காயை நமது உணவில் அல்லது அதனை ஜூஸாகவோ குடித்தால், நமது சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினை தந்து, சருமத்தை பிரகாசமாகும்.