வியர்வை நாற்றத்தை போக்க சிறந்த வழிமுறைகள்!
வியர்வை துர்நாற்றத்தில் இருந்து விடுபெற சிறந்த வழிமுறைகள் :
சிலருக்கு தொடர்ந்து வேர்த்து கொண்டே இருக்கும் ,உள்ளங்கை ,உள்ளங்கால் ,அக்குள் போன்ற பகுதிகள் எப்போதும் ஈரமாக காணப்படும்.இதனால் சில சமயங்களில் வியர்வை வரும் போது துர்நாற்றம் ஏற்படும்.
இது அருகில் இருப்பவர்களுக்கு பெரும் மன வருத்தத்தை அளிக்கும்.இதனை எளிய வடிவில் கட்டுப்படுத்தலாம்.அதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை பின்வருமாறு காணலாம்.
- ஒரு பக்கெட் நீரில் தக்காளி சாற்றை கலந்து குளித்து வந்தால் வியர்வை நாற்றத்தை முற்றிலும் விரட்டலாம்.
- தக்காளி ,கற்றாழை எலுமிச்சை சாற்றை பயன்படுத்துவதால் துர்நாற்றம் படிப்படியாக குறையும்.புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை முற்றிலும் நீங்கும்.
- குளிர்ந்த நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் முற்றிலும் நீங்கிவிடும்.
- கற்றாழையை அக்குளில் தடவுவதால் நாள் முழுவதும் சிறப்பாய் செயல்பட்டு வியர்வை துர்நாற்றத்தில் இருந்து முற்றிலும் விடுதலை பெற உதவுகிறது.