பல நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல் சாறு ..!

Published by
K Palaniammal

அருகம்புல் சாறு -அருகம்புல் சாறு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இரு பதிவில் காணலாம்..

அருகம்புல்லில் உள்ள சத்துக்கள் :

அருகம்புல்லில் 70% குளோரோஃபில் இருப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி தூய்மைப்படுத்துகிறது . அருகம்புல்லில் விட்டமின் சி,ஆன்ட்டி ஆக்சிடென்ட் , CDPF புரோட்டின் என்ற புரதச்சத்தும் நிறைந்துள்ளது. கால்சியம் மெக்னீசியம் போன்ற தாது சத்து அதிகம் காணப்படுகிறது.

நீரிழிவு நோய்:

சிறு வயதிலிருந்து அருகம்புல் சாரை அடிக்கடி எடுத்துக் கொண்டால் டைப் 2 நீரிழிவு வராமல் தடுக்க முடியும் என ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

மேலும் சர்க்கரை நோயாளிகள் வாரத்தில் இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப்படும்.ஆனால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு பிறகு எடுத்துக்கொள்ளவும் .

உடல் எடை குறைப்பு:

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அருகம்புல் சாறை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளவும். அருகம்புல் LDL என்ற  கெட்ட கொழுப்பை குறைக்கிறது.

மேலும் பசி உணர்வை குறைக்கவும் செய்கிறது .அதற்கேற்ப  இதில் உள்ள மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் உடலுக்கு எனர்ஜியை கொடுக்கிறது.

சிறுநீரகம்:

வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்றவற்றை குணப்படுத்தும். கோடை காலத்தில் காலையில் முதல் உணவாக இந்த சாறை எடுத்து வந்தால் நாளடைவில் சிறுநீர் எரிச்சல் முற்றிலும் குணமாகும் .

மேலும்  உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய   பக்கவாதம் ,புற்றுநோய் ,மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

தோல் வியாதி:

அருகம்புல் சாரை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் போது ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுகிறது. இதனால் ரத்தம் தூய்மை பெற்று தோல் அரிப்பு, தடிப்பு போன்றவை குணமாகிறது.

அது மட்டுமல்லாமல் சொரியாசிஸ், எக்ஸிமா போன்றவை வராமல் பாதுகாக்கிறது. குறிப்பாக அருகம்புல் சாறுடன் வெல்லம் சேர்த்து வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் வயதாவதை தள்ளி போடலாம்.

தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கலாம். தோல் வியாதி இருப்பவர்கள் 50 ml   அருகம்புல் சாறுடன் ஐந்து மிளகு இடித்து சேர்த்து பருக வேண்டும்.

எலும்பு வலிமை:

அருகம்புல் சாரில் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் எலும்புகளின் அடர்த்தியை அதிகமாக்கி பிற்காலத்தில் ஆஸ்டியோபோராசிஸ் வியாதி வராமல் தடுக்கும்.

மேலும் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் பாதுகாப்பதோடு பல் ஈறுகளில் ரத்தக் கசிவு வராமலும் காத்துக்கொள்ளும்.

மூக்கில் ரத்தம் கசிவு:

குழந்தைகளுக்கு சில்லி மூக்கு உடைந்து ரத்த கசிவு ஏற்பட்டால் உடனே அருகில் இருக்கும் அருகம்புல் சாரை எடுத்து ஒரு சொட்டு மூக்கில் விட்டால் நின்று விடும்.

மேலும் அடிக்கடி உடல் சளி பிடிப்பது ,ஆஸ்துமா, சைனஸ் தொந்தரவு இருப்பவர்கள் அருகம்புல்சரை எடுத்துக் கொள்ளும் போது இந்த நிலை ஏற்படாமல் தடுக்கப்படும். ஏனென்றால் இதில் அதிக அளவு விட்டமின் சி ,ஆன்டி  ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது .இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

வெள்ளைப்படுதல்:

பெண்களுக்கு ஏற்படும் அதிக வெள்ளைப்படுதல் காரணமாக அவர்கள் உடல் பலவீனமாகவும் மெலிந்தும் காணப்படுவார்கள் ,வெள்ளை படுத்தலுக்கு உடல் சூடும் ஒரு காரணமாகும் .

இந்த வெள்ளை படுதல் குணமாக அருகம்புல் சாறு 30 ml , இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து வெறும் வயிற்றில் 30 நாட்கள் எடுத்துக்கொள்ள குணமாகும்.

அருகம்புல் சாறை தயாரித்த 15 நிமிடங்களுக்குள் பருகிவிட வேண்டும். ஏனென்றால் அதில் உள்ள சத்துக்கள் ஆக்சிடேஸ் ஆகிவிடும். ஆகவே வாரத்தில் இரண்டு நாட்கள் ஆவது அருகம்புல் சாரை பருகி அதன் ஆரோக்கிய நன்மைகளை பெறுவோம்.

Recent Posts

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

6 mins ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

25 mins ago

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மைக் டைசன்’! பரபரப்பான குத்துச்சண்டை ..யாருடன்? எப்போது?

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…

30 mins ago

“டாக்டர் இல்லை., சிகிச்சை இல்லை, விக்னேஷ் உயிரிழந்து விட்டான்.!” கதறி அழும் அண்ணன்.!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…

55 mins ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…

3 hours ago

இலங்கையில் சாதனை படைத்த NPP.! தனி பெரும்பான்மை நிரூபித்த புதிய அதிபர்.!

கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…

3 hours ago