உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் நறுந்தாலியின் நன்மைகள்

Published by
லீனா
  • இறைவன் கொடுத்த இயற்கையில் விளையும் அனைத்துமே, ஏதோ ஒரு வகையில் நமக்கு ஆரோக்கியத்தை விளைவிக்கிறது.
  • நாம் தாளிக்கீரை எனப்படும் நறுந்தாளியின் மருத்துவ குணங்கள்.

நமது அன்றாட வாழ்வில் பலவிதமான பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் என பலவற்றை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் நாம் பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள் என்ன? என்பதை நாம் ஒரு தெரிந்து கொள்வதில்லை.

இறைவன் கொடுத்த இயற்கையில் விளையும் அனைத்துமே, ஏதோ ஒரு வகையில் நமக்கு ஆரோக்கியத்தை விளைவிக்கிறது. நோயே இல்லாமல் யாரும் வாழ்வதில்லை. ஏதாவது ஒரு சூழ்நிலையில், நமக்கு ஏதாவது ஒரு நோய் வந்து போவதுண்டு.

ஆனால், நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது, உடனடியாக நாம் செயற்கை மருத்துவத்தை தான் நாடுகிறோம். இது உடனடி தீர்வு கொடுத்தாலும், சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது.

தாளிக்கீரை

ஆனால், இயற்கை மருத்துவம் நமக்கு தாமதமாக தீர்வு கொடுத்தாலும், அது நிரந்தரமான தீர்வாக இருக்கும். தற்போது நாம் தாளிக்கீரை எனப்படும் நறுந்தாலியின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்.

Related image

இந்த கீரை அனைத்து இடங்களிலும் தானாக வளர்ந்து, யாரும் பயன்படுத்தாமல் வீணாகும் மூலிகை வகைகளில் இதும் ஒன்று. இது வேலிகள், சிறு காடுகள் ஆகியவற்றில் காணப்படும் கொடியினம்.

இந்த கீரையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்களை கொண்டது. இதன் இலை அதிகமான மருத்துவ குணங்களை கொண்டது. இலையை பருப்புடன் சேர்த்து கடைந்து குழம்பாகவோ, கூட்டாகவோ சமைத்து உண்ணலாம் .

உடல் அரிப்பு

உடல் அரிப்பு உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். உடலில் அரிப்பு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து தலை முதல் பாதம் வரை தேய்த்து குளித்து வர உடல் அரிப்பு நீங்கும்.

மேலும், இவ்வாறு செய்து வந்தால், தோல் நோய்கள் அணுகாது. சருமம் பளபளப்பு அடையும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.

உள் உறுப்பு நோய்கள்

உல் உறுப்பு நோய்கள் என்றால், புண், அழற்சி, வாய்ப்புண், சிறு நீரக்கப்பாதையில் தோன்றும் நோய்கள் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், இதன் கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் பூரண சுகம் பெறலாம்.

தாய்ப்பால்

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இந்த கீரை சத்து மிகுந்த கீரை ஆகும். தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரை. எனவே குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

Published by
லீனா

Recent Posts

நாளை சென்னைக்கு கனமழை அலர்ட்…மின்தடை ஏற்படும் இடங்களை குறிச்சி வச்சிக்கோங்க!

சென்னை :  நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…

2 hours ago

நாளை நடைபெறவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

3 hours ago

கனமழை எதிரொலி : திருச்சி பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

3 hours ago

நாளை ரெட் அலர்ட்! மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மயிலாடுதுறை :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…

3 hours ago

நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர் :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

4 hours ago

“அமரன் படம் சூப்பர் நண்பா”…இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய்!

சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…

4 hours ago