கசகசாவின் பயன்கள்.. தூக்கமின்மை முதல் மன அழுத்தம் வரை..
Poppy seeds-கசகசாவின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
கசகசா என்ற பெயரைக் கேட்ட உடனே நம் நினைவுக்கு வருவது அசைவ சாப்பாடு தான். அசைவ உணவுகளில் சுவைக்காகவும் ஜீரணத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது.அதில் உள்ள ஓபியம் என்கிற போதை தன்மை காரணமாக பல நாடுகளில் கசகசாவை விதைக்க தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு இது எடுத்து செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது .ஆனால் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது .குறிப்பாக மன அழுத்தத்திற்கும் ஆண்மை குறைபாட்டிற்கும் சிறந்த மருந்தாக உள்ளது.
கசகசாவில் உள்ள சத்துக்கள்;
கசகசாவில் இரும்புச்சத்து, கால்சியம் ,பாஸ்பரஸ், சிங்க் ,தாமிரம் மெக்னீசியம், துத்தநாகம், சோடியம், லினோலினிக் ஆசிட் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ,விட்டமின் பி6 அதிகம் நிறைந்துள்ளது.
கசகசாவை பயன்படுத்தும் முறை;
கசகசாவை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம் அல்லது உணவுகளில் கலந்து எடுத்துக் கொள்ளலாம். பெரியவர்கள் என்றால் அரை ஸ்பூன் ,சிறியவர்கள் என்றால் கால் ஸ்பூன் விதமும் எடுத்துக் கொள்ளலாம்.
பக்கவிளைவுகள் ;
எக்காரணத்தைக் கொண்டும் நீரில் கொதிக்க வைத்தோ அல்லது கசகசா ஊறவைத்து தண்ணீரை குடிப்பதோ கூடாது ஏனென்றால் இதில் உள்ள ஓபியம் என்ற போதை ஏற்றும் உணர்வு இருப்பதால் இவ்வாறு செய்யக்கூடாது.
கசகசாவை அதிகம் எடுத்துக் கொண்டால் சுவாசக் கோளாறுகள் மற்றும் நுரையீரல் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாமல் மயக்கம் மற்றும் மந்தநிலைமைக்கு கூட கொண்டு செல்லும்.
கசகசாவின் நன்மைகள்;
- கசகசாவை பால் சேர்த்து அரைத்து வெதுவெதுப்பான பாலில் கலந்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் மனஅழுத்தம் நீங்கி நல்ல தூக்கத்தை பெறலாம்.
- மேலும் குழந்தைகளுக்கு கால் ஸ்பூன் வீதம் அரைத்து பாலில் கலந்து கொடுத்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். அறிவுத்திறன் மங்கும் திறனை குறைக்கும். நரம்புகளுக்கு நல்ல பலம் அளிக்கக் கூடியது.
- பெண்களின் கருக்குழாய் அடைப்புகளை நீக்கும் தன்மையும் கொண்டது.ஆண்களுக்கு சிறந்த ஆண்மை பெருக்கியாகவும் உள்ளது.
- இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் உடல் சூட்டை குறைத்து அதனால் ஏற்படக்கூடிய வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
- மெனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் வயிற்று வலி குறைய கசகசா மற்றும் பாதாம் பருப்பை அரைத்து பாலுடன் கலந்து குடித்து வரலாம்.
- கசகசாவில் 50 சதவீதம் எண்ணெய் தன்மை உள்ளது. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது தேமல் ,கரும்புள்ளி இருப்பவர்கள் கசகசாவை தேங்காய் பாலில் சேர்த்து அரைத்து பூசி வரலாம்.
- அம்மை தழும்பு நீங்க கசகசாவுடன் வேப்ப இலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து தழும்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் தழும்பு மறையும்.
- கசகசாவில் தாமிரம், இரும்புச்சத்து வைட்டமின் b6 இருப்பதால் ரத்த சோகை வருவது தடுக்கப்படுகிறது.
- மேலும் அசைவ உணவுகள் சமைக்கும்போது கசகசாவை சேர்த்து சமைப்பதன் மூலம் அஜீரணம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
ஆகவே கசகசாவை சமைக்கும் உணவுகளிலும் ,தேவையான போதும் குறைவான அளவு சேர்த்துக் கொண்டால் அதன் ஆரோக்கிய பலனை பெறலாம்.