நாயுருவியின் நன்மைகள், இதை பற்றி இதுவரை அறிந்திராத உண்மைகள்
- உடலுக்கு ஆரோக்கியம் தரும் நாயுருவி தாவரத்தின் நன்மைகள்.
நமது அன்றாட வாழ்வில் நமது உடல் நலத்தில் பல ஆரோக்கிய கேடுகள் ஏற்படுகிறது. இதற்க்கு நாம் பல மருந்துகளை தேடி அளிக்கிறோம். ஆனால் பலருக்கு தீர்வாக அமைவது செயற்கை மருத்துவம் தான். பலருக்கு இயற்கை மருத்துவம் பற்றி நாம் அறிந்து கொள்ள முயல்வது கூட இல்லை.
செயற்கை மருத்துவங்கள் நமக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும். ஆனால் இயற்கை மருத்துவம் நமக்கு மெதுவாக ஆரோக்கியத்தை அளித்தாலும், அது ஆரோக்கியத்திற்கான நிரந்தர தீர்வாக இருக்கும்.
நாயுருவி
நாயுருவி அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய சிறுசெடி. இதன் இலைகள் முட்டை வடிவமானவை, எதிரடுக்கிலே அமைந்தவை. நாயுருவி தண்டுகள் பட்டையானவை, இதன் மலர்க்கொத்துகள் நீண்டவை. நுனியிலோ கிளைகளிலோ காணப்படும்.
நாயுருவி விதைகள், அவற்றைச் சூழ்ந்துள்ள சிறு முட்களுடன் எளிதில் ஒட்டிக்கொண்டு பரவும் தன்மையானது. இது அனைத்து இடங்களிலும் வளரக் கூடிய தன்மை கொண்டது.
நாயுருவி தாவரத்திற்கு அபமார்க்கி, காஞ்சரி, சரமஞ்சரி, சேகரீகம், நாயரஞ்சி, மாமுனி ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும், மருத்துவ குணங்கள் கொண்டது.
பல் உறுதி
நம் முன்னோர்கள் அக்காலத்தில் பல் துலக்குவதற்கு பற்பசையை பயன்படுத்தவில்லை. வேப்பமர குச்சிகள், கரி மற்றும் செங்கல் போன்ற பொருட்களை கொண்டு தான் பல் துலக்கினர். இதனால் அக்காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் பல் உறுதியாய் இருந்தது.
ஆனால் இன்றைய நாகரிகமான காலகட்டத்தில் பல விதமான பற்பசைகள் அறிமுகமாகியுள்ளது. பற்பசையை வைத்து தான் பல் துலக்குகின்றனர். இது நமது பற்களுக்கு ஆரோக்கியமானது அல்ல.
இந்நிலையில், நாயுருவி வேரை நீரில் கழுவி, சுத்தம் செய்து, வெயிலில் காயவைத்து, தூள் செய்து கொள்ள வேண்டும். இந்தத் தூளால் பல் துலக்கி வர பற்கள் உறுதி வரும்.
முகப் பொலிவு
இன்றைய இளம் சமூகத்தின் மிக பெரிய பிரச்சனையே சரும பிரச்சனைகள் தான். ஆனால், இதற்கு சரியான தீர்வாக செயற்கை மருத்துவத்தை தான் நாடுகின்றனர். இது பல பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்துகின்றன.
இயற்கையான மருத்துவம் நிரந்தர தீர்வை அளிக்கிறது. அந்த வகையில், நாயுருவி வேர் மற்றும் தண்டுகளை நிழலில் காயவைத்து, இடித்துத் தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, தேவையான அளவு வெந்நீரில் குழப்பி, பசையாக்கி, முகத்தில் பூசிவர முகம் பொலிவடையும்.
சிரங்கு
உடலில் ஏற்படும் சிரங்கு மற்றும் கொப்பளங்கள் நீங்க, நாயுருவி வேர் அல்லது இலையை அரைத்து பசையாக்கி, மேல் பூச்சாகப் பூச கொப்புளம், சிரங்கு குணமாகும்.