மஞ்சளில் உள்ள மங்காத நன்மைகள்!
ஆன்மீக வாழ்விலும் சரி, ஆரோக்கிய வாழ்விலும் சரி மஞ்சளுக்கு முக்கியத்துவமான ஒரு இடம் உண்டு. இந்த மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் வேதி பொருள் தான் இதன் நிறத்திற்கு காரணமாகிறது. வாசற்படிகளில் மற்றும் வீடுகளில், துஷ்டி வீடுகள் உள்ள அருகாமையில் எல்லாம் மஞ்சள் பூசுவதற்கான காரணம் மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி என்பதால் தான்.
மஞ்சளின் வகைகள்:
மஞ்சளில் மூன்று வகைகள் உள்ளது. முதல் வகை மஞ்சள் முகத்திற்கு உபயோகிப்பது. இரண்டாவது வகை கஸ்தூரி மஞ்சள் தட்டை தட்டையாக மிகுந்த வாசனையுடன் இருக்கும். முன்றாவது விராலி மஞ்சள், அதாவது குழம்புக்கு உபயோகப்படுத்தும் மஞ்சள் இது தான். ஐகானை விராலி மஞ்சள் என கூறுவார்கள்.
மஞ்சளின் பயன்கள்:
பொதுவாக இந்த மஞ்சள் இந்திய சமையல்களில் பெரும் பாகத்தை பிடித்து வைத்துள்ளது. ஏனென்றால் இந்தியாவில் மஞ்சள் இல்லாத சமையலை பார்க்க முடியாது. இது ஒரு இயற்கையான நிறமி என்பதால் அதிகளவில் உணவில் விரும்பி பயன்படுத்தப்படுகிறது. அம்மை நோய் ஏற்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, சரும நோய் மற்றும் தொழு நோயாளிகளுக்கு நல்ல மருந்து ஆகும். முகத்துக்கு பூசும் மஞ்சள் பெருமளவில் பெண்களின் முகத்தில் சூர்ய கதிர்களால் வரும் தாக்கத்தையும், கரும்புள்ளிகளையும் அளித்து, நல்ல ஊட்டம் அளிக்கிறது. இந்த மஞ்சள் தேவையில்லாத முக ரோமங்களை நீக்கவும் பெண்களுக்கு மிகவும் பயன்படுகிறது .