Summer Fruits : வெயில் காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 பழங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலே நாம் அனைவரும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள என்னென்ன பழங்களை எடுத்துக்கொள்ளலாம் என்று யோசித்து தேடி சாப்பிடுவோம். அப்படி பழங்களை சாப்பிட்டால் தான் நம்மளுடைய உடலும் இந்த கோடைகாலத்தில் குளிர்ச்சி கிடைக்கும். எனவே, இந்த கோடை காலத்தில் நாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 முக்கிய பழங்களை பற்றி பார்க்கலாம்.
தர்பூசணி
வெயில் காலம் தொடங்கிவிட்டது என்றாலே தர்பூசணி பழங்களின் சீசன் தொடங்கிவிடும். பலரும் விரும்பியும் இந்த பழங்களை வாங்கிசாப்பிட்டு கொண்டு வருகிறார்கள். கண்டிப்பாகவே இந்த பழத்தை நாம் இந்த கோடைகாலத்தில் தினமும் சாப்பிட்டு ஆகவேண்டும். ஏனென்றால், இந்த பழத்தில் அதிக அளவு நீர் சத்து இருக்கிறது. இந்த வெயில் நேரத்தில் உங்களுடைய உடலை மிகவும் குளிர்ச்சியாக வைத்து இருக்க இந்த தர்பூசணி பெரிய அளவில் உதவுகிறது. அதைப்போல, இந்த பழத்தில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளது. இது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கிர்ணி பழம்
கிர்ணி பழம் இந்த வெயில் காலத்தில் கண்டிப்பாக அனைவரும் சாப்பிட வேண்டிய முக்கிய பழமாக இருக்கிறது. ஏனென்றால், இந்த பழத்தில் நமது உடலுக்கு தேவையான பல நன்மைகள் இருக்கிறது.நீர் சத்து அதிகமாக இருப்பதன் காரணத்தால் கோடைகாலத்தில் இந்த பழமும் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், மாக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது. வெயில் நீங்கள் உங்களுடைய உடம்பை குளிர்ச்சியாக வைத்து கொள்ள நினைத்தால் கண்டிப்பாக இந்த பழத்தை எடுத்துக்கொள்ளலாம். பழமாக சாப்பிட பிடிக்காதவர்கள் ஜூஸ் செய்து குடிக்கலாம்.
திராட்சை பழம்
பலருக்கும் திராட்சை பழம் என்றால் பிரியம் தான். ஆனால், ஒரு சிலருக்கு திராட்சை பழம் சாப்பிட பிடிப்பது இல்லை. ஆனால், அப்படி தவிர்பவபவர்கள் இந்த வெயில் காலத்தில் கண்டிப்பாக சப்பிட்டே ஆகவேண்டும். ஏனென்றால், இந்த திராட்சை பழத்தில் 81 சதவீதம் வரை நீர்ச்சத்து இருக்கிறது. எனவே, இதன் காரணமாக இந்த கோடை காலத்தில் நீங்கள் சாப்பிடவேண்டிய முக்கிய பழமாக திராட்சை பழம் இருக்கிறது. அதைப்போல சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பழத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
பப்பாளி
பப்பாளி பழம் கோடை காலம் மட்டுமின்றி குளிர் காலங்களிலும் கூட மக்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றாக இருக்கிறது. இருந்தாலும் வெயில் காலத்தில் நம்மளுடைய உடலை பளபளளகவும் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள இந்த பப்பாளிபழம் பெரிய அளவில் உதவுகிறது. இந்த பப்பாளியில் 88 % வரை நீர்ச்சத்தும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ இருக்கிறது.
நீர் சத்து அதிகமாக இருப்பதன் காரணமாக கோடை காலத்தில் இந்த பப்பாளி பழமும் சாப்பிடவேண்டிய முக்கிய பழங்களில் ஒன்றாக இருக்கிறது. அதைப்போல பப்பாளி பழத்தை ஒரு அளவுக்கு மேல் எடுத்துக்கொள்ள கூடாது பலருக்கும் உடம்பில் இது சூட்டை கிளப்பிவிடும் எனவே அளவோடு எடுத்துக்கொண்டால் நல்லது.
அண்ணாச்சி பழம்
அண்ணாச்சி பழமும் கோடைகாலத்தில் சாப்பிடவேண்டிய பழங்களில் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த பழத்தில் நம்மளுடைய உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. குறிப்பாக இந்த பழத்தில் 86% வரை நீர் சத்து இருக்கிறது. இந்த கோடை காலத்தில் நமக்கு தேவை படுவது இந்த நீர் சத்து தான். எனவே, கண்டிப்பாக நீங்கள் இந்த வெயில் காலத்தில் இந்த அண்ணாச்சி பழத்தையும் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்த ஐந்து பழங்களையும் நீங்கள் இந்த கோடை காலத்தில் சாப்பிடு வந்தீர்கள் என்றால் உடல் சூட்டை தடுத்து ஆரோக்கியமாக இருக்கலாம். கண்டிப்பாக இதனை சாப்பிட்டு வந்தீர்கள் என்றாலே உங்களுக்கே தெரியும்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…