மோரை இந்த மாதிரி செஞ்சு குடிச்சா இவ்வளவு பயன்களா?

buttermilk

Buttermilk : மோர் குடிப்பதால் நம்மளுடைய உடலில் ஏற்படும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோடை வெப்பத்தில் இருந்து நாம் நம்மளுடைய உடலை பாதுகாக்க மோர் குடிப்பது மிகவும் நல்லது. இருந்தாலும் கடைகளில் மோர் வாங்கி குடிப்பதை தவிர்த்துவிட்டு நாங்கள் உங்களுக்காக சொல்லும் டிப்ஸ் படி மோர் செய்து குடித்தால் பல விதமான நன்மைகள் கிடைக்கும். எப்படி அந்த மோரை செய்வது அதில் இருந்து கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

மோர் அசத்தலாக செய்யும் முறை

முதலில் பண்ணைக்கு சென்று சுத்தமான தயிரை தேவையான அளவிற்கு வாங்கி கொள்ளுங்கள். வாங்கிய பிறகு தேவையான அளவிற்கு அந்த தயிரில் தண்ணீரை கலந்துகொள்ளவேண்டும். மத்தயை வைத்து கடைந்தால் இன்னுமே நல்லது. பிறகு ஒரு அளவுக்கு நீர் பதத்திற்கு வந்த பிறகு மல்லி இளை, இஞ்சி (2 துண்டுகள்) , உப்பு (தேவையான அளவு) ஆகியவை மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி கூல் பதத்திற்கு அரைத்து கொள்ளவேண்டும். இன்னும் ஆரோக்கியமாக இருக்கா அம்மியில் வைத்து கூட அரைத்து எடுத்துக்கொள்ளலாம்.

பிறகு தயிருடன் கலந்து வைத்து இருக்கும் மோரில் நீங்கள் அரைத்து வைத்த அந்த கூழை சேர்த்துக்கொள்ளவேண்டும். பிறகு வேண்டும் என்பவர்கள் வெங்காயம், மிளகாய் சேர்த்து கொள்ளலாம். இதெல்லாம் சேர்த்த பிறகு அசத்தலான குளு குளு ஆரோக்கியமான மோர் ரெடி.

நன்மைகள்

இப்படியான மோரை இந்த வெயில் காலத்தில் குடிப்பதால் நமக்கு உடலுக்கு தேவையான குளிர்ச்சி கிடைக்கிறது. இந்த மோரில் மல்லி இளை, இஞ்சி ஆகியவை சேர்த்துள்ள காரணத்தால் சளி, இருமல்,  போன்ற பிரச்சனைகள் வராது. இந்த கோடை காலத்தில் அதிகமானோருக்கு வயிற்றுபோக்கு ஏற்படும் அவர்கள் இந்த மோரை குடித்தால் அவர்களுக்கு வயிற்றுபோக்கு பிரச்சனை ஏற்படாது.

அதைப்போல சிலருக்கு வெயில் நேரத்தில் வாய் மற்றும் உடலில் வறட்சி பிரச்சனை இருக்கும். அவர்கள் இப்படி மோரை செஞ்சு தினமும் பருகலாம். தினமும் மோர் குடிப்பதன் மூலம் நம்மளுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதைப்போல, பலவிதமான தொற்று நோய்களில் இருந்து நம்மளை பாதுகாக்கிறது. மோரில் குறைந்த கலோரி மட்டுமே இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மோரை தினமும் குடிக்கலாம்.

குடிக்கவேண்டிய நேரங்கள்

மோர் குடிக்க சரியான நேரம் என்றால் காலையில் 10 மணி அளவில் குடிக்கலாம். அதைப்போல மத்தியான நேரத்தில் குடிக்கலாம் சாப்பிட பிறகு ஒரு கிளாஸ் குடித்தால் மிகவும் நல்லது. மாலை நேரங்களிலும் கூட குடிக்கலாம். ஆனால், இரவு நேரங்களில் குடிப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்