watermelon [file image]
Watermelon : தர்பூசணி பழத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் வரும் பிரச்சனைகள் என்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தர்பூசணி பழத்தை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது என்று சொல்லலாம். கோடைகாலம் தொடங்கிவிட்டது என்றாலே இந்த பழத்தை பலரும் வாங்கி விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே இந்த பழத்தில் அதிக அளவு நீர்சத்து இருக்கிறது என்பதால் தான். வெயில் காலத்தில் நாம் குளிர்ச்சியாக இருக்கவேண்டும் என்று இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டு கொண்டு வருகிறோம். எனவே, தர்பூசணி கோடை காலத்தில் முக்கிய பழமாக இருந்து வருகிறது.
இருந்தாலும், கோடை காலம் தொடங்கிவிட்டது தர்பூசணி பழம் அதிகமாக சாப்பிடலாம் என்று சிலர் சாப்பிடுவார்கள். ஆனால், தர்பூசணி பழத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டாலும் நம்மளுடைய உடலுக்கு சில பிரச்சனைகளும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்களே கூறுகிறார்கள். தர்பூசணி பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம்.
தர்பூசணி பழத்தில் இயற்கையாகவே இனிப்பு உள்ளது எனவே, நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சாப்பிடுவது நல்லது அல்ல. அதைப்போல சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் கூட குறிப்பிட்ட அளவு சாப்பிட்டுவிட்டு இருப்பது நல்லது. அதிக அளவு எடுத்தால் இன்னுமே சைனஸ் பிரச்சனை அதிகமாக வாய்ப்புள்ளது.
தர்பூசணி பழத்தை எந்தெந்த நேரங்களில் நாம் சாப்பிடலாம் என்ற குழப்பம் நம்மளுடைய மனதில் இருக்கும். தர்பூசணியை காலை உணவின் போது எடுத்துக்கொண்டால் நல்லது தான். அதைப்போல, மதியம் சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துக்கொள்ளலாம். மாலை நேரங்களில் கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இரவு நேரங்களில் எடுத்துக்கொள்வதை மட்டும் தவிர்க்கலாம்.
தர்பூசணி பழத்தில் 96% வரை நீர் சத்து இருக்கிறது. இதன் மூலம் நமது உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்கிறது. அதைப்போல, நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. தர்பூசணி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் இருக்கிறது. இது உங்கள் நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கும்.
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின்…