வெயிலா இருக்குன்னு தர்பூசணியை அதிகமா எடுக்காதீங்க! அப்புறம் இந்த பிரச்சனை தான் வரும்!

watermelon

Watermelon :  தர்பூசணி பழத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் வரும் பிரச்சனைகள் என்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தர்பூசணி பழத்தை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது என்று சொல்லலாம். கோடைகாலம் தொடங்கிவிட்டது என்றாலே இந்த பழத்தை பலரும் வாங்கி விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே இந்த பழத்தில் அதிக அளவு நீர்சத்து இருக்கிறது என்பதால் தான். வெயில் காலத்தில் நாம் குளிர்ச்சியாக இருக்கவேண்டும் என்று இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டு கொண்டு வருகிறோம். எனவே, தர்பூசணி கோடை காலத்தில் முக்கிய பழமாக இருந்து வருகிறது.

இருந்தாலும், கோடை காலம் தொடங்கிவிட்டது தர்பூசணி பழம் அதிகமாக சாப்பிடலாம் என்று சிலர் சாப்பிடுவார்கள். ஆனால், தர்பூசணி பழத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டாலும் நம்மளுடைய உடலுக்கு சில பிரச்சனைகளும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்களே கூறுகிறார்கள். தர்பூசணி பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம்.

தர்பூசணி தீமைகள்

  • தர்பூசணி அதிகமாக சாப்பிடுவதால் வயிற்று போக்கு ஏற்படுத்தற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
  • தர்பூசணியில் கணிசமான நீர் மற்றும் நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே அதிகமாக எடுத்துக்கொண்டால் சிலருக்கு செரிமான கோளாறுகள் ஏற்படலாம்.
  • நீர் சத்து அதிகமாக உடலில் இருப்பவர்கள் இந்த தர்பூசணி பழத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் அவர்களுடைய உடலிலும் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
  • தர்பூசணி 1 கிலோவில் 300 வரை கலோரிகள்  இருக்கிறது. எனவே, அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் எடையையும் அதிகமாகும்.

தவிர்க்க வேண்டியவர்கள் 

தர்பூசணி பழத்தில் இயற்கையாகவே இனிப்பு உள்ளது எனவே, நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சாப்பிடுவது நல்லது அல்ல. அதைப்போல சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் கூட குறிப்பிட்ட அளவு சாப்பிட்டுவிட்டு இருப்பது நல்லது. அதிக அளவு எடுத்தால் இன்னுமே சைனஸ் பிரச்சனை  அதிகமாக வாய்ப்புள்ளது.

தர்பூசணியை எந்த நேரத்தில் சாப்பிடலாம்? 

தர்பூசணி பழத்தை எந்தெந்த நேரங்களில் நாம் சாப்பிடலாம் என்ற குழப்பம் நம்மளுடைய மனதில் இருக்கும். தர்பூசணியை காலை உணவின் போது எடுத்துக்கொண்டால் நல்லது தான். அதைப்போல, மதியம் சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துக்கொள்ளலாம். மாலை நேரங்களில் கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இரவு நேரங்களில் எடுத்துக்கொள்வதை மட்டும் தவிர்க்கலாம்.

தர்பூசணி நன்மைகள் 

தர்பூசணி பழத்தில் 96% வரை நீர் சத்து இருக்கிறது. இதன் மூலம் நமது உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்கிறது. அதைப்போல, நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. தர்பூசணி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி மற்றும் பொட்டாசியம்  ஆகிய சத்துக்கள் இருக்கிறது. இது உங்கள் நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்