உடல் எடையை குறைக்க உதவும் வாழைப்பழம்….!!!
இன்றைய நாகரிகமான உலகில் அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடையால் பாதிக்கப்படுவோர், என்ன செய்வது என்று தெரியாமல், பல வழிகளில் சிகிச்சை பெறுவார்கள். ஆனால் இந்த சிகிச்சை உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறதோ, இல்லையோ பக்கவிளைவுகளை மட்டும் தவறாமல் ஏற்படுத்தி விடுக்கிறது.
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இது பல சத்துக்களை கொண்டுள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல நோய்களையும் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் மிகுந்த பழம்.
பொதுவாக அனைத்து வாழைபழத்தாலும் ஒரே மாதிரியான பலன்கள் கிடைப்பதில்லை. சில வாழைப்பழம் மலச்சிக்கலை ஏற்படுத்தும், சில வாழைப்பழங்கள் வயிறுபோக்கை ஏற்படுத்தும். இப்படி எதிர்மறையான பலன்களை கூடாது. ஒரு வாழைப்பழத்தில் 108 கலோரிகள் உள்ளது. இது 18 கிராம் கார்போஹைட்ரேட்டுக்கு சமமானது.
இந்த பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம், அனைத்து வைட்டமின் சத்துக்கள் மற்றும் அதிக அளவு தாது பொருட்களும் உள்ளது.
உடல் எடையை குறைக்கும் வாழைப்பழங்கள் :
செவ்வாழை, உவம்பழம், கற்பூரவள்ளி, மொந்தபழம் போன்ற பழங்கள் எடையை குறைக்க உதவுகிறது. ஏனென்றால் இதை அதிக அளவு B6 மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளதால் இதில் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை குறைக்கும்.
உடல் எடையை அதிகரிக்க செய்யும் வாழைப்பழம் :
மலைவாழைப்பழம், நேந்திரம்பழம் போன்ற பழங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும் வாழைப்பழங்கள். இதில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் இது உடல் எடையை அதிகரிக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பழங்களில் 10 சதவீதம் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது.
இந்த பழங்களில் உள்ள அதிக அளவு குளுக்கோஸ் தசைகளில் சேர்ந்து தசைகளை வலிமைப்படுத்துகிறது. இந்த பழங்களை மில்க்சேக் மற்றும் சாலெட்டாக சாப்பிடும்போது நமது உடல் எடை இன்னும் வேகமாக அதிகரிக்கிறது.
வாழைப்பழத்தை மற்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிடும் போது இது உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கிறது. வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல், அளவோடு சாப்பிட வேண்டும்.