இரத்தம் சம்பந்தமான நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாழைப்பூ!
வாழைமரத்தை பொறுத்தவரையில், அனைத்து பாகங்களுமே மருத்துவ தன்மை கொண்டதாகும். அந்த வகையில் வாழைப்பூ ரத்தம் சம்பந்தமானா நோய்கள் குணப்படுத்தக் கூடியது.
இன்று நாம் நாகரிகம் வளர்ந்துள்ளது என்னும் பெயரில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை தவிர்த்து, நாவுக்கு ருசியான மேலைநாட்டு உணவுகளைத் தான் தேடிச் செல்கிறோம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் நீண்ட ஆயுளோடும், உடல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்ததற்கான காரணம் இயற்கையான உணவுகளை சமைத்து சாப்பிட்டது தான்.
வாழைமரத்தை பொறுத்தவரையில், அனைத்து பாகங்களுமே மருத்துவ தன்மை கொண்டதாகும். அந்த வகையில் வாழைப்பூ ரத்த சம்பந்தமான நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. தற்போது இந்தப்பதிவில் இரத்தம் சம்பந்தமான எப்படிப்பட்ட நோய்களெல்லாம் வாழைப்பூ குணப்படுத்துகிறது என்பது பற்றி பார்ப்போம்.
உடல் பருமன்
இன்று பலரின் மிகப்பெரிய கவலையே உடல் பருமன் தான். இதனைக் குறைப்பதற்காக நாம் செயற்கையான மருந்துகளை உட்கொள்வதை விட, இயற்கையான உணவின் மூலம் உடல் பருமனை குறைப்பது நல்லது. அந்தவகையில் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதோடு, உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது.
இரத்த அழுத்தம்
இன்று மிகச் சிறிய வயதிலேயே பலருக்கும் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இந்த ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, இரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்த அழுத்தப் பிரச்சினையில் இருந்தும் விடுதலை அளிக்கிறது.
நீரிழிவு
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாகக் பாதிக்கப்படக் கூடிய நோய்களில் ஒன்று நீரிழிவு. இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால், இது இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை கரைத்து வெளியேற்ற உதவுகிறது. வாழைப்பூவில் உள்ள துவர்ப்புத்தன்மை இதற்கு உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது
கருப்பை பிரச்சனை
பெண்களுக்கு உண்டாகும் கருப்பை பிரச்சனைகள், மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் நீங்கி ஆரோக்கியத்துடன் வாழ உதவுகிறது.