அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

watermelon seeds

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும் அறியாத எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை  தருகிறது.

தர்பூசணி விதையில் உள்ள சத்துக்கள்:

தர்பூசணி விதையில் விட்டமின் சி ,விட்டமின் பி6, போலெட், நியாசின்,புரதம்  அமினோ அமிலங்கள் ,ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள்,ஒமேகா 6 பேட்டி ஆசிட்  அதிகம் காணப்படுகிறது.

தர்பூசணி விதைகளின் நன்மைகள்:

  • நம் உடலானது அமினோ அமிலங்களை தானே உற்பத்தி செய்யும் .ஆனால் அர்ஜினைன் , லைசின் போன்ற அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் நாம் உண்ணும் உணவின் மூலம் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தர்பூசணி விதைகளில் இந்த அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது.
  • 100 கிராம் தர்பூசணி விதையில் 139 சதவீதம் மெக்னீசியம் உள்ளது. மெக்னீசியம் சீரான இரத்த ஓட்டத்திற்கும், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கும் பயன்படுகிறது. மேலும் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.
  • விட்டமின் பி6 அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்பெற செய்வதோடு, நரம்பு மண்டலத்தையும் வலுவாக்குகிறது.
  • ஒரு கப் வறுத்த  தர்பூசணி விதையில் 50 கிராம் கொழுப்பு சத்து உள்ளது .இது தினசரி நம் உடலுக்கு தேவையான கொழுப்புச்சத்தில் 80 சதவீதம் பூர்த்தி செய்து விடுகிறது.
  • இந்த விதைகளில் தேநீர் செய்து குடித்து வந்தால் சிறுநீரக எரிச்சல் குணமாகும். சிறுநீரக கல் போன்றவை கரைந்து விடும்.
  • ஒமேகா 6 பேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால் இது கெட்ட கொழுப்பை கரைத்து இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.
  • லைகோபின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது ,இது மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை  நீக்கி விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.
  • இந்த விதைகள் குழந்தைகளுக்கு  ஏற்படும் வயிற்றுப் பூச்சி தொந்தரவுகளையும்  நீக்குகிறது.

தர்பூசணி விதை தேநீர் செய்முறை :

உயர் ரத்த அழுத்தம் குறைய தர்பூசணி விதைகளை நன்கு காய வைத்து பொடியாக்கி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் 1.1/2 கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு பொடி  சேர்த்து கொதிக்க வைத்து அந்தத் தண்ணீர் ஒரு கிளாஸ் வந்ததும் இறக்கி மிதமான சூட்டில் குடித்து வரவும்.

இவ்வாறு குடிக்கும் போது ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு மட்டுமல்லாமல், இன்சுலின் உற்பத்தியும் சீராக நடைபெற செய்கிறது. மேலும்  சிறுநீர் கற்களும் கரைகிறது.

ஆகவே எப்போதுமே பாதம் ,முந்திரி, பிஸ்தா போன்ற விலை உயர்ந்த விதைகளை எடுத்துக் கொள்வதை விட இதுபோல் நமக்கு எளிதில் விலையில்லாமல் கிடைக்கக்கூடிய தர்பூசணி விதைகளை அவ்வப்போது எடுத்துக் கொண்டு அதன் ஆரோக்கியமான நன்மைகளை பெறுவோம் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்