அடேங்கப்பா.! தர்பூசணியில் இவ்வளவு நன்மைகளா?

Watermelon-தர்பூசணியின் நன்மைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்.
கோடை காலத்தில் நம் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்க தர்பூசணியே போதுமானது.
தர்பூசணியின் நன்மைகள்:
- தர்பூசணியில் அதிக அளவு லைகோபீன் உள்ளது. இந்த லைகோபீன் தான் பழங்களின் சிவப்பு நிறத்திற்கு காரணமாய் இருக்கிறது. மற்ற பழங்களை விட தர்பூசணியில் அதிகம் உள்ளது. இது கண் பார்வையை கூர்மை பெற செய்வதோடு எலும்புகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.
- குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் ஏற்படும் வேர்க்குரு ஏற்படாமல் தடுக்கிறது.
- உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு நீர் சத்தும் ,நார்ச்சத்தும் மிக அவசியம். அதற்கு தர்பூசணியே போதும், இதில் அதிக அளவு நீர் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.
- இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.
- விட்டமின் பி6 அதிகம் உள்ளது .இது நம் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
- விட்டமின் சி சத்தும் அதிகம் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கிறது.
- இதில் உள்ள விதை பகுதிகளையும் கடித்து சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம் .
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் ஒரு சிறிய துண்டாக எடுத்துக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும் ஜூஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
தர்பூசணியை அதிகம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் பாதிப்புகள்:
தர்பூசணியை அதிகம் எடுத்துக் கொண்டால் கல்லீரல் பாதிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். அதனால் ஒரு நாள் ஒன்றுக்கு 150 கிராம் அளவு எடுத்துக்கொள்வது போதுமானது.
பழங்களைத் தேர்வு செய்யும் முறை:
- தர்பூசணி விளைச்சலின் போது நைட்ரேட் அதிகம் பயன்படுத்தப்படுகிறது, இது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. அதனால் பழங்களை நாம் வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும்.
- பழத்தின் நடுப்பகுதி வெள்ளையாகவும் பள்ளமாகவும் இருந்தால் அதை தவிர்க்க வேண்டும்.
- தர்பூசணியின் தோளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெள்ளை நிறம் இருப்பது மற்றும் அதன் காம்பு பச்சையாக இருந்தால் அதில் இனிப்பு சுவை குறைவாக இருக்கும் .
- மேலும் பழத்தின் காம்புகள் காய்ந்து இருந்தால் இனிப்பு சுவையோடு இருக்கும்.அது நன்கு பழுத்த பழமாகும் .
எனவே இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், உடலில் நீர் சத்தை தக்க வைத்துக் கொள்ளவும் தர்பூசணியை எடுத்துக்கொள்வோம்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025