அடேங்கப்பா! தேங்காய் பாலில் இவ்வளவு நன்மையா? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

தேங்காய் பால்  அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நிறைய பேருக்கு இது தெரிந்திருந்தாலும் பயன்படுத்த தவறியிருப்போம். தேங்காய் பாலில் அப்படி என்ன  நோயை குணப்படுத்துகிறது அதை எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் அதில் உள்ள சத்துக்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேங்காயை நாம் சமையலில் பயன்படுத்தியிருப்போம் , ஆனால் அதன் பாலை தனியாக பயன்படுத்தி வந்தால் அது பல நோய்களை குணப்படுத்துகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றது.

தேங்காய் பாலில் உள்ள சத்துக்கள்

சாச்சுரேட்டடு  ஃபேட் மற்றும் அன்சாச்சுரேட்டடு  பேட் என இரண்டுமே உள்ளது. அதிக கலோரி, விட்டமின் இ சத்து மற்றும் பாஸ்பரஸ், மெக்னீசியம் சிங்க் அதிகம் காணப்படுகிறது. இந்த சிங்க பல உணவுகளில் இருப்பதில்லை .

இருதய ஆரோக்கியம்

சாச்சுரேட்டட் ஃபேட் அதிகம் இருந்தாலும் இதய ஆரோக்கியம் பெற தேங்காய் பால் உதவுகிறது என்று பல ஆராய்ச்சிகள் கூறுகிறது. ரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைட்தான் கொழுப்பு படிய காரணமாகிறது இந்த ட்ரை கிளிசராய்டை குறைக்கவும் எச் டி எல் ஐ அதிகரிக்கவும் தேங்காய் பால் உதவுகிறது. மேலும் இருதய தசைகள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கிறது. வாரத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை 100 எம் எல் பயன்படுத்தலாம்.

அல்சர்

அல்சர் உள்ளவர்கள்  தேங்காய் பால் ஒரு வரப் பிரசாதம் ஆகும். புண்ணை ஆற்றக்கூடிய வல்லமை இதற்கு உண்டு எனவே காலை வெறும் வயிற்றில் 100 எம்எல் குடித்து வரலாம்.

தோல் வறட்சி

ஒரு சிலருக்கு சருமத்தில் வெடிப்பு மற்றும் வறண்டு காணப்படும் இது பனிக்காலம் அல்லாமல் கோடை காலத்திலும் இவ்வாறு காணப்பட்டால் தேங்காய் பாலை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். சருமத்திற்கு நல்ல ஒரு பொலிவை கொடுக்கும்.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் ஒருவேளை உணவாக தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளலாம்.

உடல் எடை அதிகரிக்க

தினமும் எடுத்துக் கொள்ளும் உணவோடு கூடவே  இந்த தேங்காய் பாலையும் எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்கும்.மாட்டுப்பால் ஒரு சிலருக்கு பிடிக்காது அவ்வாறு இருப்பவர்களுக்கு தேங்காய் பால் ஒரு வரப் பிரசாதம் ஆகும்.

பயன்படுத்தும் முறை

நன்கு முதிர்ந்த தேங்காயை அரைத்து அதில் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து  நாட்டு  சக்கரை  சேர்த்து  100 எம்எல் வீதம் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இனிப்பு தவித்து

ஆகவே தேங்காய் பாலை அவ்வப்போது நம் உணவில் சேர்த்துக் கொண்டு அதன் பலனை பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்